தமிழ் சினிமா

விசித்திர விளையாட்டை மையப்படுத்திய ‘டே 11’

நிலா

இயக்​குநர் பார​தி​ராஜா​விடம் உதவி இயக்​குந​ராகப் பணி​யாற்​றிய ஸ்ரீதிகா, பி.ஆர்.ஜி ஜெகந்​நாதன் பிக்​சர்ஸ் சார்​பில் தயாரித்து இயக்​கி​யுள்ள திரைப்​படம் ‘டே 11’. இதில் புது​முகங்​கள் ஆதர்​ஷ், மனோஜ் நாயகர்​களாக​வும் ஸ்வேதா அபி​ராமி நாயகி​யாக​வும் நடித்​துள்​ளனர்.

ரவிச்​சந்​திரன், அபிமன்​யு, தமிழ் முக்​கிய வேடங்​களில் நடித்துள்ளனர். அனில் இசையமைத்​துள்ள இப்​படத்​துக்​குச் செல்வா ஒளிப்ப​திவு செய்​துள்​ளார்.

படம் பற்றி ஸ்ரீதிகா கூறும்​போது, “இது சஸ்​பென்ஸ் த்ரில்​லர் திரைப்​படம். ஒரு பெண் உள்பட 5 தோழர்​கள் ஒரு விசித்​திர விளை​யாட்டை விளை​யாடு​வதற்​குக் கட்​டாயப் படுத்தப்படுகிறார்​கள். விளை​யாட்​டில் தோழி இறந்து விடு​கிறார். அவர் வந்தால்​தான் விளை​யாட்​டை முடிக்க முடி​யும்.

வந்​தா​ரா, இல்​லை​யா? என்​பது​தான் கதை. 11 நாட்​களில் நடக்​கும் விஷ​யங்​கள்​தான் கதை என்​ப​தால் அதையே தலைப்​பாக வைத்​துள்​ளோம். தமிழ் சினி​மா​வில் இது​வரை சொல்​லப்​ப​டாத கதையை இதில் கூறி​யிருக்​கிறோம். ஊட்​டி, கொடைக்​கானல், இமயமலை பகு​தி​களில் படமாக்கி இருக்​கிறோம். விரை​வில் திரையரங்​கு​களில்​ வெளி​யாகும்​” என்​றார்​.

SCROLL FOR NEXT