அறிமுக நடிகர் சிபி நாயகனாக நடிக்கும் படம், ‘சிட்டா’. மலையாளத்தில் வெற்றிபெற்ற ‘வாழ -2’ படத்தில் நடித்த ஆராத்யா சாய் இப்படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். மேலும் ஆதியா பிரசாத், பாலசரவணன், மூர்த்தி, மதுமிதா, அருவி மதன் உள்பட பலர் நடித்துள்ளனர். வாசுதேவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். டிசி இசையமைத்துள்ளார். லட்சுமி அம்மாள் பிலிம்ஸ் சார்பாக ‘விருத்தாச்சலம்’ படத்தைத் தயாரித்த செந்தில் முருகன் தயாரிக்கிறார்.
“கிராம நிர்வாக அலுவலகத்தைச் சுற்றி நடக்கும் கதையைக் கொண்ட படம் இது. ஒரு சாதாரண மனிதன் தனது வாழ்வுக்குத் தேவையான நிலங்களின் அடங்கல், பட்டா, சிட்டா வாங்க, படாத பாடுபடும் சம்பவங்கள் மற்றும் அதன் பின்னணியில் நடக்கும் வாழ்வியலை இதில் பதிவு செய்துள்ளோம்” என்றார் படத்தை இயக்கியுள்ள பாலு நாராயணன். இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ஜிவி பிரகாஷ் குமார் வெளியிட்டு உள்ளார்.