இந்திரன்ஸ், மதுபாலா, அபர்ணா பாலமுரளி நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ’சின்ன சின்ன ஆசை’. தம்பி ராமையா, காளி வெங்கட் முக்கியமான வேடங்களில் நடித்துள்ளனர்.
கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ள இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னட மொழிகளில் ஜூன் 19-ல் வெளியாகிறது. பாபுஜி புரொடக் ஷன்ஸ் சார்பில் அபிஜித் பாபுஜி தயாரித்துள்ள இப்படத்தை வர்ஷா வாசுதேவ் இயக்கியுள்ளார். தமிழில் ஏஜிஎஸ் சினிமாஸ் வெளியிடுகிறது.
“காசி நகரில் எதிர்பாராதவிதமாகச் சந்திக்கும் ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே நிகழும் தருணங்களை உணர்வுப்பூர்வமாகச் சொல்லும் படம் இது.
மனிதர்களுக்குள் இருக்கும் சொல்லப்படாத சின்ன சின்ன ஆசைகள் ஏராளம். அந்த நுண்ணிய உணர்வுகளை அவற்றின் சாரம் மாறாமல் திரையில் கொண்டு வரும் முயற்சியே இப்படம்” என்று படக்குழு கூறியுள்ளது.