தமிழ் சினிமா

திரைப்​படத் தணிக்கை விதிகளில் மாற்​றம்: போதை, வன்​முறை காட்சிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு

நிலா

மத்​திய தகவல் மற்​றும் ஒளிபரப்பு அமைச்​சகம், மத்​திய திரைப்பட தணிக்கை வாரி​யத்​துக்​கான புதிய திருத்​தப்​பட்ட வழி​காட்​டு​தல்​களை வெளி​யிட்​டுள்​ளது. இந்த வழி​காட்​டு​தல்​களை எக்ஸ் தளத்​தில் தணிக்கை வாரி​யத் தலை​வர் சாஷி சேகர் வேம்படி பதி​விட்​டுள்​ளார்.

அதன்​படி, திரைப்​படங்​களில் போதைப்​பொருள், வன்​முறை, பாலியல் வன்​முறை, குழந்​தைகளுக்கு எதி​ரான துஷ்பிரயோகம் மற்​றும் பிற உணர்​வுப்பூர்​வ​மான விஷ​யங்​களைச் சித்​தரிப்​பது தொடர்​பாக, கடுமையான விதி​களை அறி​முகப்படுத்​தி​யுள்​ளது.

போதைப்​பொருட்​கள் பயன்​பாடு அல்​லது கடத்​தல் காட்​சிகள் இடம் பெற்​றால், கட்​டாய​மாக எச்​சரிக்கை வாசகம் இடம்​பெற வேண்​டும். அதாவது, சட்​ட​விரோத போதைப்​பொருட்​கள் ஆரோக்கி​யத்தை பாதிக்​கும் மற்​றும் சிறைத்​தண்​டனையைப் பெற்​றுத் தரும். போதைப்​பொருளுக்கு நோ சொல்​லுங்​கள் என்ற வாசகங்​கள் இடம்​பெற வேண்​டும்.

மது, போதைப்​பொருள் அல்​லது புகை​யிலை பழக்​கத்தை நியாயப்​படுத்​தவோ, மகிமைப்​படுத்​தவோ கூடாது; இனம், மதம் அல்​லது பிற குழுக்​களை இழி​வுபடுத்​தும் காட்​சிகள் அல்​லது வார்த்​தைகளைப் பயன்​படுத்​தக் கூடாது, அறி​வியலுக்கு எதி​ரான அல்​லது தேச​விரோத மனப்​பான்​மை​களை ஊக்​குவிக்​கும் உள்ளடக்​கங்​கள் தடை செய்​யப்​படு​கின்​றன.

வன்​முறை​யால் பாதிக்​கப்​பட்​ட​வர்​களாகவோ, வன்​முறையை அரங்​கேற்​று​பவர்​களாகவோ அல்​லது வன்​முறைக்கு நிர்ப்பந்திக்கப்​பட்ட சாட்​சிகளாகவோ திரைப்​படங்​களில் குழந்தைகளைச் சித்​தரிப்​ப​தை​யும், குழந்​தைகள் எந்த வித​மான துன்​புறுத்​தலுக்​கும் உள்​ளாக்​கப்​படு​வதைக் காட்​டு​வதை​யும் தவிர்க்க வேண்​டும். உடல் அல்​லது மனநலக் குறை​பாடு உள்ளவர்களைத் துன்​புறுத்​து​வது மற்​றும் கேலி செய்​வதற்கு எதிராக​வும் இந்த வழி​காட்​டு​தல்​கள் எச்​சரிக் கின்​றன.

இந்​தி​யா​வின் இறை​யாண்மை மற்​றும் ஒரு​மைப்​பாட்​டைக் கேள்விக்​குள்​ளாக்​கும் வகை​யிலோ அல்​லது நாட்​டின் பாதுகாப்புக்கு அச்​சுறுத்​தல் விளைவிக்​கும் வகை​யிலோ காட்சிகள் இருக்​கக் கூடாது. திரைப்​படத் தலைப்​பு​கள் ஆத்திரமூட்டும் வகை​யிலோ, ஆபாச​மாகவோ, புண்​படுத்​தும் வகை​யிலோ அல்​லது வழி​காட்​டு​தல்​களை மீறும் வகையிலோ இல்லை என்​பதை உறு​திப்​படுத்த வேண்​டும் என்​பது உள்பட பல்வேறு திருத்​தங்​கள் அறிவிக்​கப்​பட்​டுள்​ளன.

மத்​திய திரைப்பட தணிக்கை வாரி​யம் சமீபத்​தில் மறு சிரமைப்பு செய்​யப்​பட்​டது. பிரீத்தி ஜிந்​தா, சுனில் ஷெட்​டி, பங்​கஜ் திரி​பாதி உள்பட 18 புதிய உறுப்​பினர்​கள் நியமிக்​கப்​பட்​டனர். இதையடுத்து திரைப்​படத் தணிக்​கைச் சான்​றிதழுக்​கானத்​ திருத்தங்​கள்​ மேற்​கொள்​ளப்​பட்​டுள்​ளன.

SCROLL FOR NEXT