தமிழ் சினிமா

‘ஜனநாயகன்’ லீக் குறித்து ஆதாரமற்ற குற்றச்சாட்டு: தணிக்கை வாரியம் மறுப்பு

செய்திப்பிரிவு

மும்பை: பத்​திரிகை தகவல் அலு​வல​கத்​தின் மும்பை மண்டல அலு​வல​கம் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: ‘ஜன​நாயகன்’ திரைப்​படத்தை சினிமா தணிக்கை வாரி​யம் கசி​ய​விட்​ட​தாக கூறப்​படும் குற்​றச்​சாட்​டு​கள் ஆதா​ரமற்​றவை. இது தவறாக வழிநடத்​தும் குற்​றச்​சாட்​டு. தணிக்கை வாரி​யம் கேடிஎம் ((Key Delivery Message) என்ற பாது​காப்பு முறையை பின்​பற்​றுகிறது.

இந்த கேடிஎம் கடவுச் சொல் சினிமா தயாரிப்​பாளரிடம் மட்​டுமே இருக்​கும். இந்த கடவுச் சொல் இல்​லாமல் யாரும்​ படத்தை பார்க்க முடி​யாது. ஜனநாயகன் படத்​தின் டிசிபி (டிஜிட்​டல் சினிமா தொகுப்​பு) விண்​ணப்​ப​தா​ரரிடம் உரிய ஒப்​புதலுடன் கடந்த 17-ம் தேதி மும்​பை​யில் ஒப்​படைக்​கப்​பட்​டது. அப்​போது முதல் அந்த நகல் அவர்​களிடம்​தான் உள்​ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

          
SCROLL FOR NEXT