’ஜனநாயகன்’ படத்தின் மீது நம் தணிக்கைத் துறை நிகழ்த்தியிருப்பது அப்பட்டமான அநீதி என்று இயக்குநர் மாரி செல்வராஜ் காட்டமாக தெரிவித்துள்ளார்.
‘ஜனநாயகன்’ படத்துக்கு தணிக்கையில் ஏற்பட்ட பிரச்சினையால் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் விஜய்க்கு ஆதரவாக பலரும் குரல் கொடுத்து வருகிறார்கள்.
இந்த விவகாரம் தொடர்பாக இயக்குநர் மாரி செல்வராஜ் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “ஜனநாயகன் திரைப்படத்தின் மீது நம் தணிக்கைத் துறை நிகழ்த்தியிருப்பது அப்பட்டமான அநீதி தான்.
ஒரு படைப்பாளி என்கிற முறையில் இந்த அநீதியை எதிர்ப்பதன் மூலம் நம் ஜனநாயகத்தின் மீதும் நம் படைப்பு சுதந்திரத்தின் மீதும் வேகமாக படரும் பேரச்சத்தை துடைத்தெறிய பெருங்குரலெழுப்புவோம்.” என்று தெரிவித்துள்ளார்.
’ஜனநாயகன்’ விவகாரம் தொடர்பான வழக்கு அடுத்ததாக சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜனவரி 21-ம் தேதி வரவுள்ளது.
இதனிடையே, முதலில் அளித்த தீர்ப்பை முன்வைத்து ‘ஜனநாயகன்’ தயாரிப்பு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தை நாடியிருக்கிறது. இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் திங்கட்கிழமை விசாரிக்கும் என தெரிகிறது.
‘ஜனநாயகன்’ விவகாரத்தில் அடுத்து என்ன நடக்கும், படம் எப்போது வெளியீடு என்பது இதுவரை அனைவருக்குமே தெரியாத ஒன்றாகவே இருந்து வருகிறது.