தமிழ் சினிமா

தனுஷின் ‘ஓம்’ படத்தை கேரளாவில் வெளியிடுகிறார் பினு ஜார்ஜ் அலெக்சாண்டர்

ப்ரியா

தனுஷ் - மம்முட்டி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஓம்: சாப்டர் 1’ படத்தை பினு ஜார்ஜ் அலெக்சாண்டர் கேரளத்தில் விநியோகிக்க இருக்கிறார்.

இந்தத் தகவலை ஒண்​டர்​பார் பிலிம்ஸ் அதன் எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அதில், ‘கடவுளின் தேசம்தான் ‘ஓம்’-ன் அடுத்த இலக்கு. ஓம் படத்தின் கேரள விநியோக உரிமையை பினு ஜார்ஜ் அலெக்சாண்டர் பெற்றுள்ளார். படம் நவம்பர் 20 அன்று வெளியாகிறது’ என்று தெரிவித்துள்ளது.

‘ஓம்: சாப்டர் 1’ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் மம்முட்டி நடித்திருப்பது கேரளா விநியோகஸ்த்துக்கான முக்கிய விஷயமாக பார்க்கப்படுகிறது.

மம்முட்டி  கடந்த 2000-ஆம் ஆண்டு வெளியான ‘பேரன்பு’ படத்துக்கு பின்பு இந்தப் படத்தின் மூலம் தமிழுக்கு மீண்டும் வருகிறார். இவர்களுடன் சாய் பல்லவி, இந்திரன்ஸ், ஸ்ரீலீலா உள்ளிட்டோர் இருப்பது முக்கியமாக கருதப்படுகிறது.

ஒண்​டர்​பார் பிலிம்ஸ் மற்றும் ஆர் டேக் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்திருக்கும் தனுஷின் 55-வது படம் ‘ஓம்: சாப்டர் 1’. இந்தப்  படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கி இருக்கிறார். எழிலரசு ஒளிப்​ப​திவு செய்திருக்கிறார். படத்துக்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். படம் நவம்பர் 20 அன்று வெளியாக இருக்கிறது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT