நஜாய் பிலிம்ஸ், ஃபிரோ மூவி ஸ்டேஷன் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் ‘அங்கம்மாள்’. இதில் பிரதான கதாபாத்திரத்தில் கீதா கைலாசம் நடித்துள்ளார். இவர்களுடன் சரண் சக்தி, பரணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டிசம்பர் 5-ம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது.
’அங்கம்மாள்’ குறித்து கீதா கைலாசம், “அங்கம்மாள் கதாபாத்திரமாக மாறுவதற்கு பயமின்றி நேர்மையாக இருக்க வேண்டும். அவளுடைய மவுனத்திற்கும், பெருமைக்கும், இதயத்துடிப்புக்கும் முழுமையாக சரணடைய வேண்டும். அங்கம்மாளை ஊக்கப்படுத்திய மக்களிடையே உண்மையான கிராமத்தில் படமாக்கியதால் ஒவ்வொரு ஃபிரேமிலும் நடிக்கும் முறையே மாறியது.
இந்தக் கதையை இவ்வளவு உணர்திறனுடன் வடிவமைத்த இயக்குநர் விபினுக்கு நன்றி. ரிகர்சல் மூலம் அல்லாமல் அந்த கதாபாத்திரத்தை உணர்ந்து நடிக்க அனுமதித்தார். சரண் சக்தி மற்றும் அனைத்து நடிகர்களின் நடிப்பும் இந்தக் கதையை உண்மையாக உணர வைத்தது. இந்தப் படம் வெளியானதும் பரணியின் நடிப்பு நிச்சயம் பேசப்படும்.
சிங்- சவுண்டுடன் நடிக்க வேண்டியிருந்ததால் படப்பிடிப்பில் நாங்கள் அனைவரும் மிகவும் சின்சியராக நடித்தோம். எங்கள் கேமரா மற்றும் சவுண்ட் டீம் கண்ணுக்குத் தெரியாத கலைஞர்களைப் போல வேலை செய்து, சூழலின் அசல் சத்தத்தை படம் பிடித்துள்ளனர். இந்தப் படம் எங்களுக்கு மட்டுமல்ல பார்வையாளர்களுக்கும் நிச்சயம் புது அனுபவத்தை கொடுக்கும்” என்று தெரிவித்துள்ளார்.