தமிழ் சினிமா

பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் ‘பத்தா’

நிலா

பாலாஜி தரணிதரன் இயக்​கத்​தில் விஜய் சேதுபதி நடிக்​கும் படத்​துக்​கு, ‘பத்​தா’ என்று தலைப்பு வைத்​துள்​ளனர்.

‘நடு​வுல கொஞ்​சம் பக்​கத்த காணோம்’, ‘சீதக்​கா​தி’ படங்​களுக்​குப் பிறகு இவர்​கள் 3-வது முறை​யாக இணை​யும் படம் இது. இதில் லிஜோமோல் ஜோஸ் கதா​நாயகி​யாக நடிக்​கிறார். சாய் அபயங்​கர் இசையமைக்​கும் இப்​படத்​துக்கு செல்​வகு​மார் எஸ்கே ஒளிப்​ப​திவு செய்​துள்​ளார்.

இயக்​குநர் அட்லி வழங்​கும் இப்​படத்​தை, ஏ ஃபார் ஆப்​பிள் ஸ்டூடியோஸ், ஸ்டார் ஸ்டூடியோ 18 மற்​றும் சினி 1 ஸ்டூடியோ புரொடக் ஷன் இணைந்து தயாரிக்​கின்றன. இதன் முதல் தோற்ற போஸ்​டரை வெளி​யிட்​டுள்ள படக்​குழு அக். 1-ம் தேதி திரையரங்​கு​களில் இப்​படம் வெளி​யாகும் என அறி​வித்​துள்​ளது.

SCROLL FOR NEXT