போட்டோ ரியலிஸ்டிக் ஏ.ஐ.தொழில் நுட்பத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘அவிரா’. விளம்பர படங்களை இயக்கியுள்ள பிரபாகரன், கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஏஐ தொழில்நுட்பத்தில் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இதை லைட் ஹவுஸ் ஃபில்ம் கம்பெனி சார்பில் கணேஷ், ஜெகதீஷ் இணைந்து தயாரிக்கின்றனர்.
படம்பற்றி பிரபாகரன் கூறும்போது, ‘‘முழுவதும் போட்டோ ரியலிஸ்டிக் ஏ.ஐ.தொழில் நுட்பத்தில் உருவாகும் படம் இது. ‘அவிரா’ என்றால் பிரபஞ்சத்தின் பேரொளி என்று பொருள். புராண காலத்து கதையை அடிப்படையாகக் கொண்டு கற்பனையாக வரும் இந்தப் படத்தை பான் இந்தியா திரைப்படமாகத் தயாரித்துள்ளேன். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பார்த்து மகிழும் ஃபேன்டஸி திரைப்படம் இது. இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன” என்றார்.