தமிழ் சினிமா

உதவி இயக்குநர்களுக்கு ரஞ்சித் தரும் ஊக்கம்!

செய்திப்பிரிவு

உதவி இயக்குநர் பணி பல மனக்கசப்புகளைக் கொண்டிருக்கும். இயக்குநருடன் அடிக்கடி மோதலுக்கும் பஞ்சமிருக்காது. இதனால் பணிபுரிந்த இயக்குநரிடமிருந்து பல உதவி இயக்குநர்கள் சொல்லாமல் கொள்ளாமல் விலகி ஓடிவிடுவது வழக்கம்.

ஆனால், பா.இரஞ்சித் தன்னிடம் சில படங்கள் பணிபுரிந்தால்கூட அவர்களைத் தனது தயாரிப்பு நிறுவனத்திலேயே இயக்குநராக்கி அழகு பார்ப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். அல்லது தயாரிப்பாளரைப் பிடித்துக்கொடுத்து, படப் பூஜை தொடங்கி ரிலீஸ்வரை உடன் நிற்கிறார்.

தற்போது அவரிடம் இணை இயக்குநராகப் பணிபுரிந்த தாமோ நாகபூஷணம் எழுதி இயக்கும் ‘அட்டாக்கர்’ படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கி வைத்திருக்கிறார்.

வாலிபால் விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் ‘ஸ்போர்ட்ஸ் டிராமா’ படமான இதை, தினேஷ்ராஜ் தயாரிக்கிறார். தனுஷின் அக்கா மகன் பவிஷ் நாயகனாகவும் குஷ்பூவின் மகள் அவந்திகா நாயகியாகவும் இப்படத்தின் மூலம் அறிமுகமாகின்றனர்.

SCROLL FOR NEXT