அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்து வரும் படத்துக்கு ‘ராக்கா’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது.
அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் புதிய படமொன்றில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு மும்பையில் உள்ள ஸ்டூடியோக்களில் நடைபெற்று வருகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் இதனை தயாரித்து வருகிறது. இன்று அல்லு அர்ஜுன் பிறந்த நாளை முன்னிட்டு இதன் தலைப்புடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
‘ராக்கா’ எனத் தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தில் வித்தியாசமான கெட்டப்பில் அல்லு அர்ஜுன் நடித்திருப்பது தெளிவாகிறது. பல்வேறு கெட்டப்களில் அல்லு அர்ஜுன் நடித்திருப்பதால், இப்படம் குறித்த தகவல்கள் அனைத்தையுமே ரகசியமாக வைத்துள்ளது படக்குழு. இதற்கு ஒளிப்பதிவாளராக ஜி.கே விஷ்ணு பணிபுரிந்து வருகிறார்.
இதன் இசையமைப்பாளராக சாய் அபயங்கர் பணிபுரிந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், படக்குழு இன்னும் உறுதிப்படுத்தவில்லை. இதில் பல்வேறு நாயகிகள் அல்லு அர்ஜுன் உடன் நடித்து வருகிறார்கள். முதலில் தீபிகா படுகோன் நடித்து வருவதை மட்டுமே படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
அல்லு அர்ஜுன் பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு தயாரிப்பாளர்கள், நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.