காந்​தா​ரா: சாப்​டர் 1

 
தமிழ் சினிமா

திரை வடிவம்: படமாக்கல், திரையிடல், கதை சொல்லும் கலை | ஒளி என்பது வெளிச்சமல்ல 10

சி.ஜெ.ராஜ்குமார்

திரைப்​படம் தோன்​றிய காலத்​திலிருந்​தே, ஒரு காட்​சியை பதிவு செய்​வதும் அதை திரையரங்​கில் மீண்​டும் அப்​படியே அச்​சுப்​பிச​காமல் திரை​யிடு​வதும் ஒரே முறைமையில் இயங்க வேண்​டும் என்ற தேவை​யால் அகலம் – உயரம் எனப்​படும், `ஆஸ்​பெக்ட் ரேஷியோ' என்ற திரைமொழி உரு​வானது.

இன்று பரவலாகப் பயன்​படுத்​தப்​படும் 16:9 என்ற வடிவம் 16 பாகம் அகலத்​தை​யும், 9 பாகம் உயரத்​தை​யும் குறிக்​கிறது. இந்​தத் தொழில்​நுட்​பப் பாதையை அமைத்​தவர் தாமஸ் ஆல்வா எடிசனின் ஆய்​வரங்​கத்​தில் பணி​யாற்​றிய வில்​லி​யம் கென்​னடி டிக்​ஸன் என்ற புகைப்​படக் கலைஞர்.

கொடாக் நிறு​வனம் செல்​லுலாய்ட் ஃபிலிம் தயாரிப்பை ஆரம்​பித்​த​போது, அதை எடிசனின் கின​டாஸ்​கோப்​பில் பயன்​படுத்​து​வதற்​காக 35மிமீ ஃபிலிம் அளவை நிலைப்​படுத்​தினர். ஒரு ஃபிரேமின் 0.95 x 0.735 இன்ச் அளவை 1:1.33 என்ற விகிதத்​தில் வகுத்​தனர்.

1907-ல் உரு​வான மோஷன் பிக்​சர் காப்புரிமை ஒப்​பந்​தம்: 35 மிமீ ஃபிலிமை கேமரா மற்​றும் புரொஜெக்​டரில் செலுத்​து​வதற்​காக ஃபிலிமின் பக்​க​வாட்​டில் துவாரங்​கள் இருக்​கும். இதனை ஃபிலிம் பெர்ஃபொரேஷன் என்​பார்​கள். ஒரு ஃபிரேமின் அளவைக் குறிப்​ப​தற்கு நான்கு துவாரங்​களைக் கணக்​கிட்டு 4-பெர்ஃப் எனப்​பட்​டது. இதை ஆஸ்​பெக்ட் ரேஷியோ வடி​வில் 1:1.33 ஃபிரேம் விகிதத்தை உரு​வாக்​கினர்.

திரைப்​படங்​களில் வசனக் காட்​சிகள் இடம்​பெற்ற பிறகு 1932-ல் அகாடமி ரேஷியோ (1:1.37) என்ற புதிய முறை அறி​முக​மானது. படத்​தில் ஒலிக்​குரிய பகுதி இடம் பெறு​வதற்​கான கட்​டமைப்பே இதன் நோக்​கம். 1950-களில் தொலைக்​காட்சி அறி​முகப்​படுத்​தப்​பட்​ட​போது, 4:3, பின்​னர் 16:9 ஆகிய வடிவங்​கள் பரவின.

தொலைக்​காட்​சி​யின் தாக்​கத்​தைக் குறைத்து திரையரங்​கின் பெரு​மையை மீட்​டெடுக்க ஹாலிவுட் திரை​யுல​கம் அகன்ற திரை முறை​களை உரு​வாக்​கியது. 1953-ல் ட்வெண்​டி​யத் சென்​சுரி ஃபாக்ஸ் நிறு​வனம் `சினி​மாஸ்​கோப் 2.35:1’ வடிவத்தை தி ரோப் படத்​தின் மூலம் அறி​முகப்​படுத்​தி​யது. அனமார்ஃபிக் லென்​ஸூகள் பயன்​படுத்​தி​ய​தால், 35 மிமீ ஃபிலிம் கொண்​டிருந்​தா​லும் காட்சி அகன்ற பரப்பை வழங்​கியது.

1959-ல் இயக்​குநர் குரு தத் இயக்​கிய காகஸ் கி ஃபூல் இந்​தி​யா​வின் முதல் சினி​மாஸ்​கோப் கருப்​பு-வெள்​ளைத் திரைப்​பட​மாக வெளி​யானது. ஒளிப்​ப​தி​வாளர் வி.கே.மூர்த்​தி​யின் சின்​னச்​சின்ன சோதனை முயற்​சிகளு​டன் உரு​வான இத்​திரைப்​படம் உலகள​வில் பெரு மதிப்​பைப் பெற்​றது.

1970-ல் வெளிவந்த `ராஜ ராஜ சோழன்' சினி​மாஸ்​கோப் வடிவத்​தில் வெளி​யான முதல் தமிழ் திரைப்​படம். 1980-களின் இறு​தி​யில் அடை​யார் ஃபிலிம் இன்​ஸ்​டிட்​யூட் மாணவர்​களின் படைப்​பான ‘ஊமை விழிகள்’ வெற்றி பெற்​றபின் சினி​மாஸ்​கோப் ஆஸ்​பெக்ட் ரேஷியோ தமிழ் சினி​மா​வில் நிலைத்து நின்​றது.

1:1.37 விகிதத்​தில் உரு​வாக்​கப்​படும் திரைப்​படங்​கள் சினி​மாஸ்​கோப் திரை​யில் திரை​யிடப்​படும் போது ஃபிரே மின் மேல்​பகு​தி​யும் கீழ்ப்​பகு​தி​யும் க்ராப் ஆனது. இதனை சரிசெய்ய எண்​பதுகளில், ஒளிப்​ப​தி​வாளர் பாலு மகேந்​திரா 1:1.66 வடிவத்தை இந்​தி​யா​வில் பிரபல​மாக்​கி​னார்.

திரை வடிவம் – கதை சொல்​லும் புதிய மொழி: திரை வடிவம் என்​பது தொழில்​நுட்​பம் மட்​டுமல்ல; அது ஒரு கதைசொல்​லும் இலக்​கணம். ஒரு கவிஞன் எப்​படி செய்​யுள் வடிவத்​தைத் தேர்வு செய்​கிறானோ, அது​போல ஒளிப்​ப​தி​வாளர் கதைக்​கேற்ப ஆஸ்​பெக்ட் ரேஷியோவை தேர்வு செய்​கிறார். `ஜூராஸிக் பார்க்' திரைப்​படத்​தில் டைனோசர்​களின் உயரத்​தைக் காட்ட 1:1.37 முறையை தேர்வு செய்​தனர்.

இருவர்...

இயக்​குநர் ஸ்டீவன் ஸ்பில்​பர்க், இந்​தப் படத்​தில் டைனோசர்​களின் பரி​மாணம், அவற்​றின் ஹைட் டாமினன்​ஸ், மனிதர்​களின் கையறு நிலை ஆகிய​வற்றை வலுப்​படுத்த அகாடமி ரேஷியோ (1:1.37) வை திட்​ட​மிட்​டுப் பயன்​படுத்​தி​னார்.

அகன்ற சினி​மாஸ்​கோப்​பில் காட்​டி​னால் டைனோசர்​களின் உயரம் குறைந்து தெரி​யும்; ஆனால் 1:1.37 போன்ற செங்​குத்து விகிதத்​தில் ஃபிரேம் அமைக்​கும்​போது, அவற்​றின் உயரம் நேரடி​யாகப் பாய்ந்து வந்து பயத்தை உரு​வாக்​கும். ஆஸ்​பெக்ட் ரேஷியோ ஒரு கதை​யின் உணர்வை எந்த அளவுக்கு மாற்​றக் கூடிய தென சுட்​டிக்​காட்​டும் மிகச்​சிறந்த உதா​ரணம் இது.

இரு​வர் – அரசி​யல் வரலாற்​றின்: காலத்​தைக் காட்ட க்ளாசிக் ரேஷியோ இயக்​குநர் மணிரத்​னத்​தின் ‘இரு​வர்’ திரைப்​படத்​தில் ஒளிப்​ப​தி​வாளர் சந்​தோஷ் சிவன், 60-களில் அரசி​யல் தலை​வர்​களின் வரலாற்​றுக் காட்சி மொழியை பிர​திபலிக்க க்ளாசிக் ஆஸ்​பெக்ட் ரேஷியோ​வான 1:1.37 வை பயன்​படுத்​தி​னார்.

அகன்ற ஃபிரேமை விட, சுருக்​க​மான க்ளாசிக் ரேஷியோ அந்​தக் காலத் திரைப்​படங்​களின் விஷுவல் ஸ்டைலை பார்​வை​யாளர்​களுக்கு துல்​லிய​மாக நினை​வூட்​டு​கிறது. இதனால் படத்​தின் முழுக் கதை​யுமே ஒரு வரலாற்​றுப் பதிவைப் போல உணர்த்​துகிறது.

காந்​தா​ரா: சாப்​டர் 1 - இரண்டு உலகங்​களின்: மோதலைக் காட்ட ‘மிக்​ஸ்ட் ஃபார்​மட்​ஸ்’ `காந்​தாரா: சாப்​டர் 1' படத்​தில் ஒளிப்​ப​தி​வாளர் அரவிந்த கஷ்யப், கதை​யின் இரு உலகங்​களை​யும் - இயற்கை (பக்​தி, நாட்​டார் புராணம்) மற்​றும் நவீன வாழ்க்கை (சட்​டம், மனிதர்​கள்) ஆகிய​வற்றை வேறு​படுத்​திக் காட்​டு​வதற்​காக ஒரே திரைப்​படத்​தில் சினி​மாஸ்​கோப் (2.39:1) மற்​றும் 1.85:1 ஆகிய​வற்​றைக் கலந்து பயன்​படுத்​தி​னார்.

காடு​கள், பூஜை, தெய்​வக்​காட்​சிகள் போன்ற பகு​தி​களில் அகன்ற ஃபிரேமை​யும், கிளை​மாக்ஸ் காட்​சிகளின் உணர்ச்சி மோதல்​கள் இடம்​பெறும் இடங்​களில் 1.85:1 முறையை​யும் பயன்​படுத்​தி​னார். இந்த ஆஸ்​பெக்ட் ரேஷியோ கதைக்​குப் பொருத்​த​மான மனநிலையை எப்​படி மாற்​றுகிறது என்​பதை நிரூபிக்​கும் சமீபத்​திய உதா​ரணம்.

திரை வடிவங்​கள் – தொடர்ந்த பரிணா​மம்: 35மிமீ ஃபிலிம் வடிவம் உட்பட 1:1.85, சூப்​பர் 35, சினி​மாஸ்​கோப், ஐமேக்ஸ் டிஎம்​ஆர் ஆகிய வடிவங்​கள் தொடர்ச்​சி​யாக வளர்ந்து வந்​துள்​ளன. அதே நேரம் 8மிமீ, 16மிமீ, 70மிமீ போன்ற ஃபிலிம் காஜஸ் தங்​கள் துறை​சார்ந்த இடத்​தில் பெரும் பங்​களிப்​பைச் செய்​துள்​ளன.

70 மிமீ வடிவத்​தில் பென்​ஹர், லாரன்ஸ் ஆஃப் அரேபி​யா, போன்ற மாபெரும் படங்​கள் உலக திரை அனுபவத்தை மாற்​றியமைத்​தன. 2008 முதல் ஐமேக்ஸ் 70 அடி அகல, 50 அடி உயரத் திரை​யில் 6 மடங்கு ரெசல்​யூஷன் தரத்​துடன் பெரும் காட்சி அடர்த்தி உரு​வாக்​கி, முழு​மை​யாக டிஜிட்​டல் யுகத்​துக்கு மாறியது.

இன்​றைய உலகில்,

2.39:1 – டிஜிட்​டல் சினிமா வைட் ஃபார்​மட்

1.85:1 – டிராமா / இண்டி ஃப்​லிம்ஸ்

16:9 - ஓடிடி, யூட்​யூப், தொலைக்​காட்சி

1:1 – சமூக வலை​தளங்​கள், வெர்​டிகல் கதை சொல்​லல்

1:1.40 – ஃபிலிம் ஐமேக்ஸ் / 1:1.90 டிஜிட்​டல் ஐமேக்​ஸ்- என்ற திரை வடிவங்​களே இன்று பிரபல​மாக உள்​ளன.

திரை வடிவம் – காட்​சி​யின் கலைமொழி: ஆஸ்​பெக்ட் ரேஷியோ என்​பது ஒரு எண் அல்ல. அது காட்​சி​யின் அளவு​கோல். திரையரங்​கில் பார்​வை​யாள​ருக்கு மிகச்​சிறந்த அனுபவத்தை கொடுப்​பது திரை வடிவங்​களே. ஷோலே, மெக்​க​னாஸ் கோல்ட், ஹேட்ஃபுல் எய்ட் ஆகிய பழைய திரைப்​படங்​களை 70 மிமீ வடிவத்​துக்​காக​வும் சமீபத்​திய கிறிஸ்​டோஃபர்​ நோலனின்​ திரைப்​படங்​களை ஐமேக்​ஸ்​ வடிவத்​துக்​காக​வுமே பார்​வை​யாளர்​கள்​ திரையரங்​குக்​குச்​ சென்​றனர்​.

(புதன்​ தோறும்​ ஒளி​காட்​டுவோம்​)

- cjrdop@gmail.com

SCROLL FOR NEXT