அஸ்வத் மாரிமுத்து மற்றும் ரஜினி

 

அஸ்வத் மாரிமுத்து

தமிழ் சினிமா

ரஜினியை இயக்கும் ‘டிராகன்’ இயக்குநர்

ஸ்டார்க்கர்

ரஜினி நடிக்கவுள்ள அடுத்த படத்தினை இயக்கவுள்ளார் அஸ்வத் மாரிமுத்து.

நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜெயிலர் 2’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் ரஜினி. இப்படத்தினை முடித்துவிட்டு அடுத்ததாக யாருடைய இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என்பது பலருடைய கேள்வியாக இருந்தது. இதற்காக பல்வேறு இயக்குநர்களிடம் கதைகள் கேட்டுவந்தார்.

அதில் ‘பார்க்கிங்’ இயக்குநர் ராம்குமார் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என்று தகவல்கள் பரவின. ஆனால், தற்போது ‘டிராகன்’ இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ரஜினி நடிப்பது உறுதியாகி இருக்கிறது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு ஜனவரி முதல் வாரத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது.

ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதத்தில் தொடங்கவுள்ளது. ரஜினி – அஸ்வத் மாரிமுத்து சந்திப்பு இதுவரை 5 முறை நடந்துள்ளது. இறுதியாக நடைபெற்ற சந்திப்பில் அவர் கூறிய இறுதிக் கதை மிகவும் பிடித்திருந்ததால் உடனடியாக ஒகே சொல்லியிருக்கிறார் ரஜினி. இதனால் பரபரப்பாக பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

SCROLL FOR NEXT