நிகில் முரளி இயக்கத்தில் ஆர்யா கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் ‘ஹலோ காதல்’. இது அவரின் 40-வது திரைப்படம். இதில் நிகிலா விமல், வைஷ்ணவி சைதன்யா முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ஜீவா சங்கர், ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இயக்குநர் ஹலிதா ஷமீம் வசனம் மற்றும் கூடுதல் திரைக்கதைப் பணிகளைக் கவனித்துள்ளார். ஆர்யா, சாயிஷா இணைந்து தங்களது தி ஷோ பீப்பிள் நிறுவனம் சார்பில், கிஷோர் டி. உடன் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளனர்.
கடந்த ஆண்டு ஆர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு, இப்படத்தைப் பற்றிய அறிவிப்பை வெளியிட்டிருந்தனர். இப்போது படத்தின் டீஸர் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது. காதலை மையமாகக் கொண்ட இப்படம் டிச.4-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.