தமிழ் சினிமா

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் நாயகனாகும் ‘அருவி’ இயக்குநர்?

ஸ்டார்க்கர்

இயக்குநர் அருண்பிரபு புருஷோத்தமன் நாயகனாக அறிமுகமாகும் படத்தினை சிவகார்த்திகேயன் தயாரிக்கவுள்ளார்.

‘அருவி’, ‘வாழ்’ மற்றும் ‘சக்தி திருமகன்’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் அருண்பிரபு புருஷோத்தமன். இவருடைய முதல் படமான ‘அருவி’ பல்வேறு திரைப்பட விழாக்களில் விருது வென்றது மட்டுமன்றி, வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது. தற்போது தனது அடுத்த படத்துக்கு தயாராகி வருகிறார் அருண்பிரபு புருஷோத்தமன்.

சிவகார்த்திகேயன் தயாரிக்கவுள்ள இப்படத்தினை இயக்குவது மட்டுமன்றி நாயகனாகவும் நடிக்க முடிவு செய்துள்ளார் அருண்பிரபு. இதற்காக பல்வேறு பயிற்சிகளை மேற்கொண்டு தயாராகி வருகிறார். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

சிவகார்த்திகேயன் தயாரிக்கும் படத்தினை முடித்துவிட்டு, முன்னணி தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் படத்தினை இயக்க முடிவு செய்துள்ளார். இதற்கான பணிகளையும் ஒருபுறம் மும்முரமாக மேற்கொண்டு வருகிறார்.

SCROLL FOR NEXT