தமிழ் சினிமா

‘தாஸ் அண்ணன் வந்தாலே ஃபயரு’ - ‘அரசன்’ புதிய கிளிம்ப்ஸ் வெளியீடு!

ப்ரியா

சென்னை: வெற்றிமாறன் இயக்கத்தில், சிலம்பரசன் நாயகனாக நடித்துள்ள ‘அரசன்’ படத்தின் புதிய கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது. வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ். தாணு மற்றும் கோல்ட் மைன்ஸ் டெலிஃபிலிம்ஸ் சார்பில் மனிஷ் ஷா இணைந்து தயாரித்துள்ள இத்திரைப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

வெளியாகியுள்ள இந்த ’ஃபயர்’ கிளிம்ப்ஸ் வீடியோவில், ’ஃபயரு ஃபயரு ஃபயரு.. தாஸ் அண்ணன் வந்தாலே ஃபயரு’ என்ற கானா பாடல் பின்னணியில் ஒலிக்க சிலம்பரசன் கையில் அரிவாளுடன் எதிரிகளுடன் மோதும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. பாடல் கேட்பதற்கு ‘மாமா மாமா மாமா’ என்ற பழைய பாடலின் சாயலில் இருந்தாலும் ஹிட் ஆகப் போவது உறுதி.

இப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவும், ஜாக்கி கலை இயக்கமும், பீட்டர் ஹெய்ன் சண்டைப் பயிற்சி இயக்கமும் மேற்கொண்டுள்ளனர். படம் குறித்த அடுத்தடுத்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT