தமிழ் சினிமா

’அரசன்’ படத்துக்கு ஒரு பெரிய உழைப்பு தேவை: சமுத்திரக்கனி

ஸ்டார்க்கர்

’அரசன்’ படத்துக்கு ஒரு பெரிய உழைப்பு தேவை என்று இயக்குநர் சமுத்திரக்கனி தெரிவித்துள்ளார்.

’அரசன்’ படத்தின் 2-ம் கட்ட படப்பிடிப்பு விரைவில் சென்னையில் தொடங்கவுள்ளது. அதனை முடித்துவிட்டு மீண்டும் கோவில்பட்டியில் படப்பிடிப்பு தொடங்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. தாணு தயாரித்து வரும் இப்படத்தினை வெற்றிமாறன் இயக்க, சிம்பு நாயகனாக நடித்து வருகிறார். இப்படம் ‘வடசென்னை’ படம் நடந்த காலகட்டத்தில் மற்றொரு இடத்தில் நடக்கும் கதை என்று வெற்றிமாறன் பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.

          

இதனை தற்போது சமுத்திரக்கனியும் உறுதிப்படுத்தி இருக்கிறார். ‘அரசன்’ படம் குறித்து, “நானும் ‘அரசன்’ படத்தில் நடிக்கவுள்ளேன். இதில் சிம்பு – தனுஷ் மோதல் இருக்குமா என்று தெரியாது. நான் இருக்கிறேன் என்று வெற்றிமாறன் கூறினார். ‘அரசன்’ படத்தின் கதையின் அனைத்து சம்பவங்களும் இருக்கிறது. ஒவ்வொரு முறை வெற்றிமாறன் கதையைச் சொல்லும் போது, அது முற்றிலும் வித்தியாசமாக இருக்கும்.

’அரசன்’ படத்துக்கு ஒரு பெரிய உழைப்பு தேவை. அதைத் தவிர எதையும் இப்போதைக்கு சொல்ல முடியாது” என்று தெரிவித்துள்ளார் சமுத்திரக்கனி. ’வடசென்னை’ படத்தில் குணா கதாபாத்திரத்தில் நடித்தவர் சமுத்திரக்கனி. அவருடன் அமீர், கிஷோர், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். தற்போது அவர்கள் அனைவருமே ‘அரசன்’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT