தமிழ் சினிமா

“கிராமங்களின் உயிரோட்டத்தை திரையில் காட்டியவர்...” - பாரதிராஜாவுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் புகழஞ்சலி

தமிழினி

சென்னை: “என் இசையை தென்னிந்தியாவின் மிகத் தொலைதூர கிராமங்களுக்குக் கொண்டு சென்றதற்கு நன்றி” என இயக்குநர் பாரதிராஜா மறைவுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இரங்கல் தெரிவித்துள்ளார்.

‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜாவின் மறைவு தமிழ் திரையுலகை ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவுக்கு நடிகர்கள், இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள் உள்ளிட்ட பல்வேறு திரைப் பிரபலங்களும், தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஏ.ஆர்.ரஹ்மான் தனது எக்ஸ் தளப் பதிவில், “தமிழ் கிராமங்களின் காதலையும், உயிரோட்டத்தையும் உங்களைப் போல யாரும் திரையில் காட்டவில்லை. உங்கள் படைப்புகள் தலைமுறைகளைத் தாண்டி பலருக்கு ஊக்கமளித்துக் கொண்டே இருக்கும்.

என் இசையை தென்னிந்தியாவின் மிகத் தொலைதூர கிராமங்களுக்குக் கொண்டு சென்றதற்கும், அந்த மக்களின் வாழ்க்கைக் கதைகளை உலகிற்கு அறிமுகப்படுத்தியதற்கும் நன்றி. அமைதியாக இளைப்பாறுங்கள், பாரதிராஜா” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT