நடிகை எமி ஜாக்சன், தமிழில், ‘மதராசப்பட்டினம்’, ‘தெறி’, ‘2.0’ உள்பட சில படங்களில் நடித்துள்ளார். இந்தி மற்றும் தெலுங்கிலும் நடித்துள்ள அவர், ‘சூப்பர்கேர்ள்’ என்ற ஹாலிவுட் தொலைக்காட்சித் தொடரிலும் நடித்திருக்கிறார். இவர் ஜார்ஜ் என்பவரை காதலித்தார்.
2019-ம் ஆண்டில் அவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. ஆண் குழந்தையும் பிறந்தது. சில காரணங்களால் 2021-ல் பிரிந்தனர். இதைத் தொடர்ந்து, ஆங்கில நடிகர் எட் வெஸ்ட்விக்கை காதலித்த எமி, 2024-ம் ஆண்டு இத்தாலியில் திருமணம் செய்துகொண்டார். 2025-ம் ஆண்டில் இவர்களுக்கு ஆஸ்கர் அலெக்ஸாண்டர் என்ற ஆண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில் தனது 2-வது திருமண நாளைக் கொண்டாடியுள்ளார் எமி ஜாக்சன். அதுபற்றி அவர் கூறும்போது, “நெருங்கிய நண்பரையே வாழ்க்கைத் துணையாகத் தேர்ந்தெடுப்பதுதான் சிறந்தது என்பது இப்போது புரிகிறது. அன்பு, குழந்தை கள், சாகசங்கள், சற்று குழப்பமான முடிவுகள், அளவுகடந்த மகிழ்ச்சி என இந்த 2 ஆண்டுகள் கடந்திருக்கின்றன. இந்த வாழ்க்கையை வேறு யாருடனும் பகிர்ந்து கொள்ள விரும்பமாட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.