அமீர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் படத்துக்கு ‘மாகாளி’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இப்படத்தை ஐங்கரன் சார்பாக கே. கருணாமூர்த்தி - நவ்வி சார்பாக திவ்யா மாரி செல்வராஜ் மற்றும் இயக்குநர் மாரி செல்வராஜ் இணைந்து தயாரிக்கின்றனர். எஸ்.பி.அரவிந்த் இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
இதில், அனில்குமார், ஹரிஹரன், ராம், லெனின் பாரதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். செல்வரத்தினம் பிரதீப் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைக்கிறார். “மனித வாழ்வின் வலி, எல்லைகள் மற்றும் ஆழமான சமூக அக்கறை கொண்ட அழுத்தமான கதைக்களத்தில் இப்படம் உருவாகி வருகிறது” என படக்குழு தெரிவித்துள்ளது. இதன் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது.