தமிழ் சினிமா

அஜித்துடன் இணையும் விஜய் – சிவா

ஸ்டார்க்கர்

அஜித்தை வைத்து இயக்குநர் ஏ.எல்.விஜய் ஓர் ஆவணப் படத்தையும், இயக்குநர் சிவா விளம்பர படமொன்றையும் இயக்கி வருகிறார்கள்.

அஜித் - ஆதிக் ரவிச்சந்திரன் படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகும் என்பது உறுதியாகி இருக்கிறது. அதற்கு முன்னதாக மலேசியாவில் நடைபெற்று வரும் கார் ரேஸ் பந்தயத்தில் ஈடுபட்டு வருகிறார் அஜித். அவருடன் பயணித்துள்ள குழுவில் இயக்குநர் ஏ.எல்.விஜய் மற்றும் இயக்குநர் சிவா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

அஜித் – விஜய் – சிவா மூவரும் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இது தொடர்பாக விசாரித்தால், அஜித்தின் அணிக்கு ஸ்பான்சர் செய்துள்ள குழு ஒன்றுக்கு விளம்பரப் படம் ஒன்றை இயக்கி வருகிறார் சிவா. இதற்கான பணிகளில் அவர் ஈடுபட்டு வருகிறார்.

அதே போல் இயக்குநர் விஜய்யோ, அஜித்தின் கார் ரேஸை ஒரு ஆவணப் படமாக உருவாக்கி வருகிறார். இதில் விஜய்யின் குழு மும்முரமாக பணிபுரிந்து வருகிறது. கார் ரேஸுக்கு இடையே அஜித் ரசிகர்களை சந்திப்பது மற்றும் ரேஸுக்கு முன்பு அஜித் தயாராவது என அனைத்தையும் படமாக்கி வருகிறார்கள்.

இந்த இரண்டு படங்களுமே எப்போது, எதில் வெளியாகும் என்பது உறுதியாகவில்லை.

SCROLL FOR NEXT