தமிழ் சினிமா

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘ஓ..! சுகுமாரி’

செய்திப்பிரிவு

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் படத்துக்கு ‘ஓ..! சுகுமாரி’ என்று தலைப்பு வைத்துள்ளனர்.

தெலுங்கில் வெற்றிபெற்ற ‘ப்ரீ வெட்டிங் ஷோ’ படம் மூலம் கவனிக்கப்பட்ட வீர் ஹீரோவாக நடிக்கும் படம் இது. இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடிக்கிறார். மேலும் ஜான்சி, விஷ்ணு, ஆமணி, முரளிதர் கவுட், ஆனந்த், அஞ்சிமாமா, சிவானந்த், கோட்டா ஜெயராம், கவிரெட்டி ஸ்ரீனிவாஸ் உள்பட பலர் நடிக்கின்றனர்.

அறிமுக இயக்குநர் பரத் தர்ஷன் இயக்கும் இப்படத்தை கங்கா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் மஹேஸ்வர் ரெட்டி மூலி தயாரிக்கிறார். சி.ஹெச். குஷேந்தர் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு பரத் மஞ்சிராஜு இசை அமைக்கிறார். தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னட மொழிகளில் வெளியாக இருக்கும் இதன் படப்பிடிப்பு இப்போது நடந்து வருகிறது. இதன் டைட்டிலை படக்குழு இப்போது வெளியிட்டுள்ளது.

SCROLL FOR NEXT