அறிமுக இயக்குநர் கார்த்திக் பெருமாள்சாமி இயக்கும் படம், ‘அண்டர் 18’. இதில் ஐஸ்வர்யா ராஜேஷ், விக்ராந்த், கிஷோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ‘மெட்ராஸ்காரன்’ படத்தைத் தொடர்ந்து, எஸ்.ஆர். புரொடக் ஷ்ன்ஸ் சார்பில் பி. ஜெகதீஸ் தயாரிக்கிறார்.
வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு சாம் சி.எஸ். இசை அமைக்கிறார். இதன் டைட்டில் லுக்கை இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்டார்.
“உண்மைச் சம்பவங்களின் தாக்கத்துடன் கூடிய ஓர் உணர்வுப்பூர்வமான கதையாக இந்தப் படம் இருக்கும். சமூக யதார்த்தமும், குடும்ப உணர்வுகளும் கலந்து உருவாகும்படம் இது.
குற்ற உலகின் கொடூரமுகத்தையும், அதனால் பாதிக்கப்படும் குடும்பத்தின் உணர்வு களையும், எமோஷனல் டிராமாவாக இப்படம் பேசும். தமிழகத்தின்அறியப்படாத க்ரைம் பின்னணிகளை நேரில் ஆய்வு செய்து இப்படம் உருவாகிறது” என்கிறது படக்குழு இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கின்றன.