நடிகை ஸ்ருதி ஹாசன்

 
தமிழ் சினிமா

“சினிமா கொடுத்த மனப்பக்குவம்”- ஸ்ருதி ஹாசன் நெகிழ்ச்சி

நிலா

இந்​தி​யில்​ 2009-ம்​ ஆண்​டு வெளி​யான ‘லக்​’ என்​ற படம்​ மூலம்​ நடிகை​யாக அறி​முக​மானவர்​ ஸ்ரு​தி. இப்​போது தமிழ்​, தெலுங்​கு, இந்​தி என 3 மொழிகளி​லும்​ நடித்​து வரு​கிறார்​. இசைக்​ கலைஞருமான அவர்​ பாடல்​களும்​ பாடி வரு​கிறார்​. தனி ஆல்பங்களும்​ வெளி​யிட்​டு வரு​கிறார்​. நடிகை​யாக 17 ஆண்டுகளை நிறைவு செய்​துள்​ள ஸ்ரு​தி ஹாசன, அந்​தப்​ பயணம்​ பற்​றி பேசி​யிருக்​கிறார்​.

இதுபற்​றி அவர்​ கூறும்​போது, “இந்​தப்​ பயணம்​ எனக்​கு என்​னைப்​ பற்​றி​யும்​, என்​ தொழிலைப்​ பற்​றி​யும்​, மனிதர்​களைப்​ பற்​றி​யும்​ நிறைய கற்​றுக்​ கொடுத்​திருக்​கிறது. ஒரு படைப்​பின்​ வெற்​றி, தோல்​வியைத்​ தாண்​டி, அதை உரு​வாக்​க ஒரு பெரிய குழு​வின்​ கூட்​டுமுயற்​சி அவசி​யம்​ என்​ப​தை உணர வைத்​திருக்​கிறது.

இந்​த 17 ஆண்​டு​களில்​ திரை​யுல​கம்​ எனக்​குக் கற்​றுக்​கொடுத்​த மிகப்​பெரிய பாடம்​, என்​னை வலிமை​யானவளாக​வும்​, மன உறுதியானவளாக​வும்​ மாற்​றி இருக்கிறது. எந்​த விமர்சனத்தையும்​, சவாலை​யும்​ தாங்கிக்​கொள்​ளும் ​மனப்பக்குவத்​தை அது எனக்​குக்​ கொடுத்​திருக்​கிறது” என்​று தெரிவித்​துள்​ளார்​.

SCROLL FOR NEXT