தமிழ் சினிமா

இசை அமைப்​பாளரை மணந்தார் நடிகை ரோஷினி ஹரிப்பிரியன்

ப்ரியா

விஜய் டிவி​யில் ஒளிபரப்​பான ‘பாரதி கண்​ணம்​மா’ என்ற தொடரில் நடித்து பிரபல​மானவர் ரோஷினி ஹரிப்பிரியன். பின்​னர் சசிகு​மார், சூரி நடித்த கருடன், காளி வெங்​கட் நடித்த ‘மெட்​ராஸ் மேட்​னி’, விஜய் சேதுபதியின் ‘தலை​வன் தலை​வி’ ஆகிய படங்​களில் நடித்தார்.

இவரும் இசை அமைப்​பாளர் சுந்தரமூர்த்தி​யும் காதலித்து வந்​த​தாகக் கூறப்​பட்​டது. இந்​நிலை​யில் பிப்​.15-ம் தேதி இவர்​கள் திரு​மணம் செய்​து​கொண்​டனர்.

          

இதில் அவர்​கள் குடும்​பத்​தினர், நெருங்​கிய நண்​பர்​கள் கலந்​து​கொண்​டனர். திரு​மணப் புகைப்​படங்​களை ரோஷினி தனது சமூக வலை​தளப் பக்​கத்​தில் வெளியிட்டுள்​ளார்.

அவர்​களுக்கு திரை​யுல​கினர், ரசிகர்கள் வாழ்த்​துகளைத் தெரி​வித்து வரு​கின்​றனர். இசை அமைப்​பாளர் சுந்​தரமூர்த்​தி, பொம்மை நாயகி, தண்​டட்​டி, ஐரா உள்பட பல படங்​களுக்கு இசை அமைத்​துள்​ளார்.

SCROLL FOR NEXT