நடிகை ரோஜா

 
தமிழ் சினிமா

“விஜய் கேட்ட கேள்​வி​யால் அம்மாவாக நடிப்​பதை நிறுத்தினேன்” - நடிகை ரோஜா

நிலா

நடிகை ரோஜா, நீண்ட இடைவெளிக்​குப் பிறகு நடித்​துள்ள திரைப்​படம் ‘அன்பே டயா​னா’. பாரி இளவழகன் இயக்​கி, நாயக​னாக நடித்​துள்ள இப்​படத்​தில் ரம்யா ரங்​க​நாதன், ரோஜா, சேத்​தன் என பலர் நடித்​துள்​ளனர்.

இதில் நடித்​தது பற்றி ரோஜா கூறும்​போது, “இந்​தப் படத்​தில் அம்மா​வாக நடித்​துள்​ளேன். கதைப்​படி, சென்​னை​யில் குடியேறிய தெலுங்கு குடும்​பம் என்​ப​தால் படத்​தில் தெலுங்கு பேசி நடித்துள்ளேன். இயக்​குநர் பாரி இளவழகன், என்னை மனதில் வைத்து தான் இந்​தக் கதா​பாத்​திரத்தை எழு​தினேன் என்று சொன்னார். கதையோடு என்​னால் முழு​வது​மாக கனெக்ட் ஆக முடிந்​தது. ரசிகர்​களுக்​கும் இந்​தப் படம் பிடிக்​கும். படப்​ பிடிப்​பில் மிக​வும் ஜாலி​யாக, ரசித்து நடித்​தேன்.

12 வருடத்​துக்கு முன் விஜய்​யின் ‘காவலன்’ படத்​தில் அசினுக்கு அம்​மா​வாக நடித்​தேன். அப்​போது விஜய், “நீங்​கள் அம்​மா​வாக நடிக்​கிறீர்​களா ?” என்று நம்ப முடி​யாமல் கேட்​டார். ஒரு ஹீரோவே இப்​படிக் கேட்​கிறாரே, தவறாக அம்மா கேரக்​டரை தேர்வு செய்​து​விட்​டோமோ ?” என்று நினைத்து அம்​மா​வாக நடிப்​ப​தைத் தவிர்த்து விட்​டு, சின்​னத்​திரை நிகழ்ச்​சிகளுக்​குச் சென்றுவிட்டேன்.

இப்​போது மீண்​டும் நடிக்க வந்​துள்​ளேன். அடுத்து ‘லெனின் பாண்டியன்’ படத்​தி​லும் நடித்​திருக்​கிறேன். நல்ல கதாபாத்திரங்கள் கிடைத்​தால் தொடர்ந்து நடிப்​பேன். ஆந்​திர அரசி​யலில் நான் வெற்றி பெற்​றதற்​குக் காரணம் சினி​மா​தான். அது​தான் மக்​களிடம் என்​னைக் கொண்டு சென்​றது. எனக்கு சினிமா, அரசி​யல் இரண்​டிலும் முன்​னாள் முதல்​வர் ஜெயலலிதா தான் ரோல் மாடல். இவ்​வாறு நடிகை ரோஜா கூறி​னார்.

SCROLL FOR NEXT