நடிகர் விக்​ரம்

 
தமிழ் சினிமா

‘விக்​ரம் 63’ படப்​பிடிப்பு தொடங்கியது

நிலா

அரிமா நம்​பி, இரு​முகன், நோட்​டா, எனிமி ஆகிய படங்​களை இயக்​கிய ஆனந்த் ஷங்​கர் இயக்​கத்​தில் விக்​ரம் நடிக்​கும் படம் பற்றிய அறி​விப்பு சில மாதங்​களுக்கு முன் வெளி​யானது. அவருடைய 63-வது படமான இதை, சத்​யஜோதி பிலிம்ஸ் சார்​பில் டி.ஜி.​தி​யாக​ராஜன் வழங்க, செந்​தில் தியாக​ராஜன், அர்​ஜுன் தியாக ​ராஜன் தயாரிக்​கின்​றனர்.

இப்​படத்​தில் எம்​.எஸ்​.​பாஸ்​கர், ஊர்​வசி, சம்​யுக்தா ஹெக்​டே, ரியா ஷிபு, விடிவி கணேஷ், சுபாஷ் செல்​வம், விஷ்ணு ஜி உள்​ளிட்ட பலர் முக்​கிய கதா​பாத்​திரங்​களில் நடிக்​கின்​றனர். சந்​தோஷ் நாராயணன் இசையமைக்​கிறார். ஆர்டி ராஜசேகர் ஒளிப்​ப​திவு செய்​கிறார். ‘‘ஃபேமிலி த்ரில்​லர் ஆக் ஷன் திரைப்​பட​மாக உருவாக இருக்​கும் இதில் மாஸ் அம்​சங்​களு​டன் காட்சிகள் இருக்கும். இதன் படப்​பிடிப்பு தற்​போது தொடங்​கி​யுள்​ளது’’ என​ படக்​குழு தெரி​வித்​துள்​ளது.

SCROLL FOR NEXT