நடிகர் விஜய் சேதுபதி

 
தமிழ் சினிமா

‘பத்​தா’ பட நிகழ்வில் முதல்வர் விஜய்யை புகழ்ந்த விஜய் சேதுபதி!

நிலா

நடு​வுல கொஞ்​சம் பக்​கத்த காணோம், ‘சீதக்​கா​தி’ படங்​களை இயக்​கிய பாலாஜி தரணிதரன், அடுத்து இயக்கி இருக்​கும் படம் ‘பத்​தா’. விஜய் சேதுபதி ஹீரோ​வாக நடித்​துள்ள இதில், லிஜோமோல் ஜோஸ், சபரி உள்பட பலர் நடித்​துள்​ளனர்.

சாய் அபயங்​கர் இசையமைக்​கும் இப்​படத்​துக்கு செல்​வகு​மார் எஸ்கே ஒளிப்​ப​திவு செய்​துள்​ளார். ஸ்டார் ஸ்டூடியோ 18, இயக்குநர் அட்லி வழங்​கும் இப்​படத்​தை, ஏ ஃபார் ஆப்​பிள் ஸ்டூடியோஸ் மற்​றும் சினி 1 ஸ்டூடியோ புரொடக் ஷன் இணைந்து தயாரித்துள்ளது. அக். 1-ல் வெளி​யாகும் இப்​படத்​தின் இசை வெளியீட்டு விழா சென்​னை​யில் நடை​பெற்​றது.

படக்​குழு​வினர் கலந்​து​கொண்ட இவ்​விழா​வில் விஜய் சேதுபதி பேசும்​போது, “பாலாஜி தரணிதரன் மாதிரி ஒரு​வர்​தான் இது​போன்ற கதையை எழுத முடி​யும். அவர் எனக்கு நெருக்கமானவராக இருப்​பதை நினைத்து மகிழ்​கிறேன். இது எந்த மாதிரி​யான படம் என்று நிறைய கேள்வி​கள் இருக்​கலாம். ஒரு பக்​கம் விருது வாங்​கும் என்று சொல்​கிறோம், மறு​பக்​கம் தியேட்​டரில் கலெக் ஷன் பார்க்​கும் என்​றும் சொல்​கிறோம்.

‘அதெப்​படி விருது வாங்​கும் படம் கலெக் ஷன் பண்​ணும்?’ என்ற கேள்வி​கள் இருக்​கலாம். இந்த கேள்வி​களுக்கு இந்​தப் படம் பதில் சொல்​லும்” என்​றார். பின்​னர் கேள்வி​களுக்​குப் பதிலளித்த அவரிடம் முதல்வர் விஜய் பற்றி கேட்​கப்​பட்​டது.

அவர் கூறும்​போது, “ஜேசன் சஞ்​சய் பிறந்​த​நாளுக்கு வாழ்த்​துச் சொல்லி இருந்​தேன். இதற்​காக விஜய் எனக்கு போன் செய்து ‘நண்பா’ அவன் ரொம்ப சந்​தோஷப்​பட்​டான்’ என்​றார். நான் அதை எதிர்​பார்க்​கவே இல்​லை. ஏனென்​றால் அவர் பெரிய சூப்​பர் ஸ்டார். சஞ்​சய்க்கு என்​னைப் பிடித்​திருப்​பதும் பெரிய ஆச்​சரி​யம். நான் சஞ்​ச​யிடமே ‘உங்​கள் வீட்​டில் எவ்​வளவு பெரிய நடிகர் இருக்கிறார்’ என்​றேன்.

நான் சஞ்​ச​யின் ‘சிக்​மா’ படப்​பிடிப்பு தளத்​துக்​குச் சென்று இருந்தேன். என் நண்​பர் ரோஹன், ‘ஜன​நாயகன்’ படத்​தில் நடித்துக்கொண்​டிருந்​தார். நான் சஞ்​சயின் படப்​பிடிப்பு தளத்துக்குச் சென்றிருந்​ததை அறிந்த விஜய், ரோஹன் மூல​மாக எனக்கு அன்​பான அரவணைப்பை அனுப்​பி​னார். நான் கொடுத்ததாகச் சொல்லி இதை அவரிடம் கொடுங்​கள் என்று கூறி அனுப்பி இருந்​தார். அவருடைய அந்த செயல் மிக​வும் இனிமையான​தாக​வும், கனிவானதாக​வும் இருந்​தது” என்​றார்.

பிக்​பாஸ் நிகழ்ச்​சி​யில் விஜய் சேதுபதி பேசிய கருத்​துகள் சர்ச்சையான நிலை​யில், தற்​போது அவர் முதல்வர் விஜய் குறித்து பேசிய கருத்​துகள் சமூக ஊடகங்​களில் வைரலாகி வரு​கின்​றன.

SCROLL FOR NEXT