வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரவேற்பைப் பெற்ற திரைப்படம் ‘வடசென்னை’. இந்தப் படத்துடன் தொடர்புடைய கதையாக ‘அரசன்’ படம் உருவாகிறது.
இதில், சிலம்பரசன் நாயகனாக நடிக்கிறார். விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார்.
கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இந்தப் படத்தின் புரமோ வீடியோ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
இதன் படப்பிடிப்பு எப்போது என்று பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தன. இந்நிலையில் இதன் ஷூட்டிங் பற்றி சிலம்பரசன் தகவல் தெரிவித்து உள்ளார்.
மலேசியாவில் நகைக்கடை திறப்புவிழாவுக்காகச் சென்றுள்ள நடிகர் சிலம்பரசன் அங்கு பேசும்போது, டிச.9-ம் தேதி மதுரையில் ‘அரசன்’ படப்பிடிப்பு தொடங்கு கிறது. இங்கிருந்து நேரடியாக அங்குதான் செல்ல இருக்கிறேன். உங்கள் அன்பும் ஆதரவும் தேவை என்று தெரிவித்துள்ளார்.