தமிழ் சினிமா

​வி​வாகரத்து கிடைக்​கும்​ வரை சினிமா​வில் நடிக்கப் போவதில்லை: நடிகர் ரவி மோகன் கண்ணீர்

நிலா

நடிகர் ரவி மோகன் அவரது மனைவி ஆர்த்​தி​யிடம் விவாகரத்து கோரி வழக்கு தாக்​கல் செய்​துள்​ளார். இவ்​வழக்கு நிலு​வை​யில் உள்​ளது. இந்​நிலை​யில் பாடகி கெனிஷாவுடன், ரவி மோகன் பழகி வரு​வதும் பல்​வேறு விழாக்​களில் இரு​வரும் ஜோடி​யாகப் பங்​கேற்​றதும் சர்ச்​சை​யானது. இதைக் கண்​டித்து ரவி மோக​னின் மனைவி ஆர்த்தி பதி​விட்டு இருந்​தார்.

இதற்கிடையே பாடகி கெனிஷா தனது தனிப்​பட்ட வாழ்க்கை குறித்​தும் தான் சென்​னையை விட்​டுச் செல்​வ​தாக​வும் நேற்று முன் தினம் பதி​விட்டு இருந்​தார். அவரது பதிவு பரபரப்பை ஏற்படுத்​தி​யது.

இந்​நிலை​யில் செய்​தி​யாளர்களை நேற்று சந்​தித்த ரவி மோகன் கண்​ணீருடன் பேட்டி அளித்​தார். அவர் கூறிய​தாவது: எனக்கு விவாகரத்து கிடைக்​கும்​வரை நடிக்​கப் போவ​தில்​லை. என்​னால் நடிக்க முடிய​வில்​லை. எனக்கு நடந்த தேவை​யில்​லாத அவமானங்களை என்​னால் தாங்க முடிய​வில்​லை. எப்​போது என் தனிப்​பட்ட வாழ்க்கை சரி​யாகிறதோ, எப்​போது இந்த ‘சைபர் புல்லிங்’ எல்​லாம் நிற்​கிறதோ, அப்​போது கண்​டிப்​பாக மீண்​டும் நடிக்க வரு​வேன். அது கடவுள் கையில் இருக்​கிறது.

23 வருட​மாக நடித்து வரு​கிறேன். எனது 95 சதவி​கித திரைப்​படங்​கள் வெற்றி பெற்​றிருக்​கின்​றன. என் குடும்​பம்​தான் எனக்கு எல்​லாம். அவர்​களை ஏதும் சொன்​னாலோ, சீண்ட வேண்​டும் என்று நினைத்​தாலோ நான் சும்மா இருக்க மாட்​டேன். இத்​தனை நாள் பேசாமல் இருந்​ததே என் தப்​பு. என் பிள்​ளை​களைப் பார்க்க விட மறுக்​கிறார்​கள். ஸ்கூலுக்கு பாது​காவலர்​களோடு அனுப்பி வைக்கிறார்​கள்.

அந்த வாழ்க்கை பிடிக்​க​வில்லை என்​று​தானே ஓடி வந்​தேன். என்னை ரத்​தம் வரும் அளவுக்​குச் சுரண்​டி​னார்​கள். வீட்டை விட்டு எது​வுமே இல்​லாமல் வெளியே வந்​தேன். நான் வாடகை வீட்​டில் தான் இருக்​கிறேன். என் நண்​பர்​கள் என்​னைக் காப்​பாற்​றி​னார்​கள். கோடிக் கணக்​கான ரூபா​யில் நான் கட்​டிய வீட்​டில் அவர்​கள் சுக​மாக இருக்​கிறார்​கள். வெளியே போ என்று சொல்ல எனக்​கு எவ்​வளவு நேரம் ஆகும்?

ஒரு​வனை எவ்​வளவு​தான் கிண்​டல், கேலி செய்​வீர்​கள்? முதலில் நான் மனுஷன். ஒரு மனிதனுக்கு கஷ்டம் வரும்​போது, உடன் நின்​றவர் கெனிஷா. என்​னுடைய 45 வயதுக்​குப் பிறகு அழகுக்​குப் பின்​னால் ஓடு​வ​தாகச் சொல்​கிறார்​கள். என் வேலையே அழகான பெண்​களு​டன் நடிப்​பது​தான். அவர்​களுக்கு ஏதாவது ஒரு காரணம் தேவை, அதற்​காக எதையா​வது சொல்​கிறார்​கள். சைபர் புல்​லிங் மூல​மாக கெனிஷாவை காலி பண்ணி அனுப்பி விட்​டார்​கள். 23 வருட திரை​வாழ்​வில் எந்த ‘பிளாக்​மார்க்​’கும் இல்​லாமல்​தானே இருந்​தேன்.

அவர்​களுக்கு நான் உயிரோடு இருக்​கக் கூடாது. அது​தான் தேவை. அது கண்​டிப்​பாக நடந்து விடும். அதற்கு முன்​னால் எல்லோரையும் முடித்​து​விட்டு சந்​தோஷ​மாகப் போவேன். என் குழந்​தைகளைப் பார்க்க விடாத​தால் என் கைகளை வெட்​டிக்​கொண்​டேன். இது​தான் இனி நடக்​கும். அது​தான் அவர்​களுக்​கும் வேண்​டும்” என்று கூறிய ரவி மோகன் தொடர்ந்து பேச முடி​யாமல் கண்ணீர்விட்​டார்.

பிறகு பேசிய அவர், “என்​னைப் பற்றி பேச இட்லி நடிகைக்​குத் தகுதி இல்​லை. 3 பேரின் வாழ்க்​கையை அழிக்க முயன்ற அந்த நடிகை, என்​னைப் பற்றி பேச ஏதாவது துப்பு இருக்​கிற​தா? அவருக்கு எந்த அரு​கதை​யும் இல்​லை. இனி பேசி​னால் நான் சும்மா விட மாட்​டேன். இவ்​வாறு ரவிமோகன் கூறி​னார்.

SCROLL FOR NEXT