தமிழ் சினிமா

இசை ஆல்​பத்​தில் பிரபுதேவா மகன்!

ப்ரியா

நடிகர் பிரபு தே​வா​வின் மகன் ரிஷி தேவா ‘முதல் முதலாய் ’ என்ற இசை ஆல்​பம் மூலம், அசத்​தலான நடன​மாடி நடிக​ராக அறிமுகமாகி இருக்​கிறார்.

ரவிச்​சந்​திரன் ஸ்ரீநி​வாஸ் எழுதி இசையமைத்​துள்ள இப்​பாடலை, ஜி.வி பிர​காஷ் குமார் பாடி​யிருக்​கிறார். ரிஷி தேவாவுடன் நடிகை கைரா இணைந்து நடன​மாடி​யுள்​ளார்.

இந்​தப் பாடலில் காதல், அப்​பா​வித்​தனம், மறக்க இயலாத தருணங்​கள் ஆகியவை பாடல் வரி​களு​டன் இணைந்​துள்​ளன. இந்த ஆல்பத்தை ட்ரஸ்​டினா ஐசக் இயக்​கி​யுள்​ளார். ஆர்.பி.குரு தேவ் ஒளிப்​ப​திவு செய்ய, சுரேன் நடனம் அமைத்​திருக்​கிறார். சரிகம நிறு​வனம் வெளி​யிட்​டுள்ள இப்​பாடல் யூடியூப்​பில் வேகமாகப் பரவி வரு​கிறது.

          
SCROLL FOR NEXT