தமிழ் சினிமா

நடிகர் முத்துக்​காளை​யின் மனைவி மரணம்

நிலா

தமிழ் சினி​மா​வில் நகைச்​சுவை வேடங்​களில் நடித்து வருபவர் முத்துக்​காளை​. இவர் மனைவி மாலதி (47), மூளை​யில் ஏற்​பட்ட ரத்த கசிவு காரண​மாக, கீழ்​பாக்​கம் மருத்​து​வ​மனை​யில் அனுமதிக்​கப்​பட்​டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்​பட்​டது. 19 நாட்​களாக மருத்​து​வ​மனை​யில் சிகிச்​சைப் பெற்று வந்த அவருக்கு மூச்​சு​விடச் சிரமம் ஏற்​பட்​டது.

நினை​வில்​லாமல் இருந்த அவருடைய மேல் சிகிச்​சைக்​காக‌ முதல்வர் விஜய் உதவ வேண்​டும் என முத்துக்​காளை​ சில நாட்களுக்கு முன் கோரிக்கை வைத்​தார். இதையடுத்து அமைச்சர் ராஜ்மோகன், கீழ்​பாக்​கம் மருத்​து​வ​மனைக்​குச் சென்று முத்துக்​காளை​ மனை​விக்கு உரிய சிகிச்சை அளிக்க மருத்துவர்களிடம் வலி​யுறுத்​தி​னார்.

இந்​நிலை​யில் சிகிச்சை பலனின்றி மாலதி நேற்று காலை உயி​ரிழந்​தார். அவருடைய உடல் சொந்த ஊரான ராஜ​பாளை​யம் அரு​கிலுள்ள திருக்கோதையார்​புரத்​துக்கு இறு​திச்​சடங்​குக்​காக எடுத்​துச் செல்லப்​பட்​டது. மனை​வியை இழந்​த முத்​துக்​காளைக்​கு திரையுலகினர்​ இரங்​கல்​ தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT