தமிழ் சினிமா

“தாமதம் என்​பது எங்​களுக்கு புதிதில்லை” - நடிகர் கார்த்தி

செய்திப்பிரிவு

நலன் குமர​சாமி இயக்​கத்​தில் கார்த்​தி, கீர்த்தி ஷெட்​டி, ராஜ்கிரண், சத்​ய​ராஜ், ஷில்பா மஞ்​சு​நாத் உள்பட பலர் நடித்​துள்ள ‘வா வாத்​தி​யார்’ படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரித்​துள்​ளார்.

இப்​படத்​துக்கு ஜார்ஜ் வில்​லி​யம்ஸ் ஒளிப்​ப​திவு செய்​துள்​ளார். சந்​தோஷ் நாராயணன் இசையமைத்​துள்​ளார். படம் பற்றி நடிகர் கார்த்தி கூறும்​போது, “பெரிய கொண்​டாட்​ட​மாக கடந்த வருடம் இந்​தப் படத்தை வெளி​யிட திட்டமிட்​டோம். அது தள்​ளிப்​போய்​விட்​டது. எனது முதல் படமும் இது போல தள்​ளிப்போனது. அடுத்​தப் படம் தள்​ளிப் போனது. அதனால் தாமதம் என்​பது எங்​களுக்கு புதுசு இல்​லை; பழகி​விட்​டது.

சின்ன வயதில் என் அப்​பா, ஒவ்​வொரு அரிசி​யிலும் யார் பெயர் எழுதப்​பட்டு உள்​ளதோ அவர்​களுக்​குத்​தான் அது கிடைக்​கும் என்பார். அது​போல் சினிமாவில் ஒவ்​வொரு ஃபிரேமிலும் யார் பெயர் எழுதப்​பட்​டுள்​ளதோ அவர்​களுக்குத்​தான் கிடைக்​கும். இது அப்​போது புரிய​வில்​லை, இப்​போது புரிகிறது.

இயக்​குநர் நலன் எல்​லோருக்​கும் பிடித்த இயக்​குநர். அவர் இந்த கதையை கொண்டு வந்​த​போது, எனக்கு பயமாக இருந்​தது. இந்த கேரக்​டருக்கு ஒரு தனி பயிற்சி வேண்​டும். ஆனால் நான் பயிற்சி எடுக்​க​வில்​லை. படப்​பிடிப்பு தளத்​தில் கற்​றுக்​கொண்​டேன், மிகவும் சின்​சி​ய​ராக பண்ண முயற்சி செய்​துள்​ளேன்.

ஒவ்​வொரு நாளும், எம்.ஜி.ஆர். சாரின் படங்​களைத் திரும்​பத் திரும்ப பார்த்​து, அவரின் முகத்தை திரை​யில் கொண்டு வந்​துள்​ளேன். எம்​.ஜி.ஆர் திரை​யில் மட்​டுமில்​லை, நிஜத்​தி​லும் ஹீரோ​வாக இருந்திருக்கிறார். அதை மாடர்​னாக ரசிக்​கக்​கூடிய கமர்​ஷியல் படமாக செய்​தது பெரிய விஷ​யம். குழந்​தைகளோடு, குடும்​ப​மாக, சேர்ந்து ​பார்​த்​து ரசிக்​கும்​ ஜாலி​யான பட​மாக இது இருக்​கும்​” என்றார்​.

SCROLL FOR NEXT