கவுதம் ராம் கார்த்திக் கதாநாயகனாக நடித்துள்ள படம், ‘ப்ளடி பாலிடிக்ஸ்’. நாயகியாக அஞ்சனா நேத்ருன் நடித்துள்ளார்.
செல்வராகவன், பி.வாசு, ஏ.வெங்கடேஷ், வ.ஐ.ச. ஜெய பாலன், மாறன், இந்துமதி, ஆதித்யா கதிர், பாக்கியம் சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தீனா ராகவன் இயக்கும் இப்படத்தை ‘டாடா’ இயக்குநர் கணேஷ் கே.பாபு, தயாரித்துள்ளார். சஞ்சய் முத்துக்குமார் வி, இணை தயாரிப்பு செய்துள்ளார்.
ராஜு முருகன் வசனம் எழுதி உள்ள இப்படம் வலுவான அரசியல் கதைக் களத்தில் உருவாகியுள்ளது. இதன் படப்பிடிப்பு இப்போது நிறைவடைந்துள்ளது. போஸ்ட் புரொடக் ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன என்று படக்குழு தெரிவித்துள்ளது.