தமிழ் சினிமா

‘காளி​தாஸ் 2’ சாதாரண க்ரைம் த்ரில்​லர் அல்ல: பரத் தகவல்

ப்ரியா

பரத் நடித்து 2019ம் ஆண்டு வெளி​யான திரைப்​படம், ‘காளி​தாஸ்’. இதன் அடுத்த பாகம் ‘காளி​தாஸ் 2’ என்ற பெயரில் உருவாகியுள்ளது. முதல் பாகத்தை இயக்​கிய ஸ்ரீ செந்​தில் இதையும் இயக்​கி​யுள்​ளார்.

பரத்​துடன் அறி​முக நடிகர் அஜய் கார்த்​திக், பிர​காஷ் ராஜ், கிஷோர், சுரேஷ் மேனன், பவானி ஸ்ரீ, அபர்​ணதி உள்​ளிட்ட பலர் நடித்​துள்​ளனர். ‘பூவே உனக்​காக’ சங்​கீ​தா, அழுத்​த​மான வேடத்தில் நடித்​துள்​ளார். சுரேஷ் பாலா ஒளிப்​ப​திவு செய்திருக்கும் இந்​தப் படத்​துக்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். ஃபைவ் ஸ்டார் செந்​தில் தனது ஸ்கை பிக்சர்ஸ் சார்​பில் தயாரித்​துள்​ளார்.

          

ஏப்.10-ல் வெளி​யாகும் இப்​படத்​தின் இசை வெளி​யீட்டு விழா சென்னை​யில் நடை​பெற்​றது. தயாரிப்​பாளர்​கள் ஆர்.பி.சவுத்​ரி, தாணு, ஜி.கே.எம். தமிழ்க்​குமரன், எஸ்.ஆர்.பிரபு, அருண் விஷ்​வா, நடிகர் ஹரீஷ் கல்​யாண், இயக்​குநர் பாண்​டி​ராஜ் உள்பட பலர் கலந்​து​கொண்​டனர்.

இதில் நடிகர் பரத் பேசும்​போது, “ஒரு நடிகருக்கு நல்ல இயக்​குநர் கிடைத்​து​விட்​டால், அந்​தப் படத்​தின் பாதி வெற்​றி, அங்​கேயே உறுதி​யாகி​விடும். எனக்கு அப்​படிப்​பட்ட நல்ல இயக்​குந​ராக இப்படத்​தின் இயக்​குநர் செந்​தில் அமைந்​தார். அவரை என் வாழ்க்கை​யில் பெற்​றிருப்​பது எனக்கு ஆசீர்​வாதம். ‘காளி​தாஸ்’ எனக்கு முக்​கிய​மான திருப்​பம். ‘காளி​தாஸ் 2’ வாயி​லாக மீண்​டும் இந்​தக் கதா​பாத்​திரத்​துக்கு திரும்பி வந்தது இன்​னும் அதிக மகிழ்ச்சி தரு​கிறது.

இந்​தப் படம் சாதாரண க்ரைம் த்ரில்​லர் அல்ல. இதில் உணர்ச்சி உள்​ளது, மர்​மம் உள்​ளது, சஸ்​பென்ஸ் உள்​ளது. ஆரம்​பத்​திலிருந்து முடிவு வரை பார்​வை​யாளரைப் பிடித்து வைத்​துக்​கொள்​ளும் வலிமை இந்​தப் படத்​துக்கு இருக்​கிறது. இந்​தப் படத்​தின் மிகப்பெரிய பலம் சாம் சிஎஸ் இசை. ஒவ்​வொரு ​காட்​சிக்​கும்​ வரும்​ பின்​னணி இசை இந்​தப்​ படத்​தை இன்​னொரு நிலைக்​கு உயர்​த்​தியுள்​ளது” என்​றார்​.

SCROLL FOR NEXT