இயக்குநர் ராசி அழகப்பன்
‘வண்ணத்துப் பூச்சி’ என்ற சிறுவர்களுக்கான படத்தை இயக்கிய ராசி அழகப்பன் அடுத்து இயக்கும் படத்துக்கு ‘ஆண்ட’ என்று தலைப்பு வைத்துள்ளார். இப்படத்தை மதர் ஆர்ட்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் அவரே தயாரிக்கிறார்.
படம் பற்றி அவர் கூறும்போது, “சில வருடங்களுக்கு முன் நான் எழுதிய ‘விருட்சம்’ என்ற சிறுகதையின் அடிப்படையில் இப்படத்தின் கதையை உருவாக்கியுள்ளேன். ஜென் ஸி தலைமுறையின் பார்வையில் தொடங்கி, 1980-களின் வாழ்க்கைச் சூழலை உயிர்ப்புடன் கண்முன் கொண்டு வந்து நிறுத்தும் கதையாக உருவாகிறது.
இதில் இடம்பெறும் தட்சணாமூர்த்தி என்ற கதா பாத்திரத்தின் முழுமையான வாழ்க்கைப் பயணமே கதையின் மையம். வானத்தை நோக்கி கனவுகளைக் கண்ட ஒரு மனிதன், மண்ணோடு இணைந்து வாழ்ந்த வாழ்க்கை, அவன் சந்தித்த சவால்கள், சமூகப் பொறுப்பு, மனித நேயம் மற்றும் வாழ்வியல் நெறிகள் ஆகியவற்றை பதிவு செய்யும் படைப்பாக இது இருக்கும். புது முகங்கள் நடிக்கின்றனர்” என்றார்.