இந்தியா–அமெரிக்க கூட்டுத் தயாரிப்பில் உருவாகியுள்ள தமிழ் திரைப்படம், ‘ஆகாசத்தின் உத்தரவு’. எழுத்தாளர் இமையம் எழுதிய சிறுகதையை மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. 76 நிமிடங்கள் தொடர்ச்சியாக ஒரே ஷாட்டில், ஒரே கதாபாத்திரத்துடன், ‘சிங் சவுண்டு’டன் எடுக்கப்பட்ட உலகின் முதல் திரைப்படம் என்ற பெருமையை இது பெற்றுள்ளது.
சர்வதேச புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ், இந்திய புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் அமைப்புகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ள இப்படத்தை கார்த்திக் ராதாகிருஷ்ணன் இயக்கியுள்ளார். மகேஸ்வர பாண்டியன் தயாரித்துள்ளார். இந்த படம் சமீபத்தில் நடைபெற்ற ஜாக்ரன் திரைப்பட விழாவில் சிறந்த திரைக்கதை விருதை வென்றது.
இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இத்திரைப்படத்தை வழங்குகிறார். நாடக நடிகர் பாஸ்கர் நடித்துள்ள இப்படத்துக்கு விக்னேஷ் மலைச்சாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.