தமிழ் சினிமா

சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் மாற்றம்

ஸ்டார்க்கர்

சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் உருவாகும் ‘சேயோன்’ படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார் சிவகார்த்திகேயன். இதனை ராஜ்கமல் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்துக்குப் பிறகு சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்துக்கு தேதிகள் ஒதுக்கியுள்ளார் சிவகார்த்திகேயன்.

சத்யஜோதி பிலிம்ஸ் – சிவகார்த்திகேயன் இணையும் படத்தை முதலில் வெங்கட்பிரபு இயக்குவதாக இருந்தது. ஆனால், இப்படத்தின் பட்ஜெட் பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எட்டப்படவில்லை. இதனால், வெங்கட்பிரபு படத்தை கைவிட்டுவிட்டது சத்யஜோதி நிறுவனம். தற்போது அதற்கு பதிலாக ‘பார்க்கிங்’ இயக்குநர் ராம்குமார் இயக்கவுள்ள படத்தை தயாரிக்கவுள்ளது சத்யஜோதி நிறுவனம். அதில் சிவகார்த்திகேயன் நடிக்க சம்மதம் தெரிவித்து, முதற்கட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

அதேபோன்று, ரஜினி படத்தின் இயக்குநர் பொறுப்பிலிருந்து விலகியிருக்கிறார் சிபி சக்கரவர்த்தி. அவருடைய படத்தை தற்போது ஃபேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. அப்படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். ரஜினி படத்துக்கு முன்னதாக, சிவகார்த்திகேயன் படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்குவதாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT