தமிழ் சினிமா

மாரி செல்வராஜ் - உதயநிதியின் ‘மாமன்னன்’ பட பாடல்கள் வெளியீடு

செய்திப்பிரிவு

சென்னை: மாரிசெல்வராஜ் இயக்கியுள்ள ‘மாமன்னன்’ படத்தின் பாடல்களை படக்குழு வெளியிட்டுள்ளது.

‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’ படங்களைத் தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கும் திரைப்படம் ‘மாமன்னன்’. ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிக்கும் இப்படத்தில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். உதயநிதி ஸ்டாலின், ஃபஹத் பாசிலுடன் இப்படத்தில் வடிவேலு பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்திற்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். பெரும் எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘ராசா கண்ணு’ பாடல் கடந்த மே 19-ம் தேதி வெளியானது. யுகபாரதி வரிகளில் வடிவேலு பாடியிருந்த இந்தப் பாடலை பலரும் கொண்டாடி வருகின்றனர். படத்தின் மற்றொரு பாடலான ‘ஜிகுஜிகு ரயில்’ பாடல் மே 27-ம் தேதி வெளியானது. இப்பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் பாடியிருந்தார். இந்நிலையில் படத்தின் பாடல்கள் வெளியாகியுள்ளன. படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தற்போது நடைபெற்று வருகிறது.

பாடல்கள் பட்டியல்:

  1. பாடல்: ‘கொடி பறக்குற காலம்’ பாடகர்கள்: கல்பனா ராகவேந்தர், ரக்ஷிதா சுரேஷ், தீப்தி சுரேஷ், அபர்ணா ஹரிகுமார்
  2. பாடல்: ‘நெஞ்சமே நெஞ்சமே’ பாடகர்கள்: விஜய் யேசுதாஸ், சக்திஸ்ரீ கோபாலன்
  3. பாடல்: ‘உச்சந்தல’ பாடகர்கள்: தீப்தி சுரேஷ், ஸ்ரீஷா பாகவதுலா, பவித்ரா சாரி
  4. பாடல்: ‘வீரனே’ பாடகர்: ஏ.ஆர்.அமீன்
  5. பாடல்: ‘ராசாக்கண்ணு’ பாடகர்: வடிவேலு
  6. பாடல்: ‘ஜிகுஜிகு ரயில்’ பாடகர்: ஏ.ஆர்.ரஹ்மான்
SCROLL FOR NEXT