ப்ரியதர்ஷினி இயக்கத்தில் வரலெட்சுமி சரத்குமார் நடிப்பில் உருவாகவுள்ள படத்துக்கு 'சக்தி' என பெயரிடப்பட்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது.
மிஷ்கினிடம் முதன்மை உதவி இயக்குநராக பணிபுரிந்த ப்ரியதர்ஷினி இயக்கத்தில் வரலெட்சுமி சரத்குமார் நடிக்க புதிய படமொன்று தொடங்கப்பட்டது. இதர நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என மூன்று மொழிகளிலும் தயாராகும் இப்படத்தின் போஸ்டர்களை சிவகார்த்திகேயன், ராணா மற்றும் துல்கர் சல்மான் ஆகியோர் தங்களது சமூகவலைத்தள பக்கங்களில் வெளியிட்டுள்ளார்கள்.
முழுக்க முழுக்க நாயகியை மையப்படுத்திய ஆக்ஷன் கதைக்கு 'சக்தி' என பெயரிட்டு இருக்கிறார்கள். கலை இயக்குநராக ராமலிங்கம், ஒளிப்பதிவாளராக பாலாஜி ரங்கா, இசையமைப்பாளராக சாம் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்கள். சரண்யா லூயிஸ் தயாரிக்கிறார்.