பிக்பாஸ் நிகழ்ச்சி வாழ்க்கையை மாற்றும் அனுபவமாக இருந்தது என்று கணேஷ் வெங்கட்ராம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.
பிக் பாஸ் போட்டியாளர்களில் சிநேகன், ஆரவ், கணேஷ் வெங்கட்ராம் மற்றும் ஹரிஷ் ஆகியோர் இறுதிப் போட்டிக்கு தேர்வானார்கள். இறுதியில் ஆரவ் தான் வெற்றியாளர் என்று அறிவிக்கப்பட்டது.
பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்துவிட்டதால் மீண்டும் தனது ட்விட்டர் பக்கத்திற்கு திரும்பியுள்ளார் கணேஷ் வெங்கட்ராம். "நன்றி அன்பு நண்பர்களே.. உங்கள் அன்பும், ஆதரவும் திக்குமுக்காட செய்துவிட்டன. பிக்பாஸ் நிகழ்ச்சி வாழ்க்கையை மாற்றும் அனுபவமாக இருந்தது. 100 நாட்களுக்குப் பிறகு வீட்டுக்குத் திரும்பியதில் அற்புதமாக உணர்கிறேன்." என்று பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் தனது முதல் ட்வீட்டாக கணேஷ் வெங்கட்ராம் தெரிவித்திருக்கிறார்.
கணேஷ் வெங்கட்ராம் மீண்டும் ட்விட்டர் பக்கத்திற்கு திரும்பியிருப்பதற்கு, பல்வேறு திரையுலக பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சியில் சிநேகன் மற்றும் கணேஷ் வெங்கட்ராம் இருவருக்குமே ஆரவ்வைத் தாண்டி ஆதரவு இருந்தது. இதனால் சமூக வலைதளத்தில் ஆரவ் வெற்றியடைந்ததற்கு எதிராக பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.