தமிழ் சினிமா

நம்பிக்கை அளிக்கும் இசை - அசோக் செல்வனின் ‘போர் தொழில்’ டீசர் எப்படி?

செய்திப்பிரிவு

அசோக் செல்வன், சரத்குமார் நடிக்கும் ‘போர் தொழில்’ படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அசோக்செல்வன் நடிப்பில் கடந்த 2022-ம் ஆண்டு வெளியான படம் ‘நித்தம் ஒரு வானம்’. இந்தப் படத்தைத் தொடர்ந்து அவரது நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘போர் தொழில்’. விக்னேஷ் ராஜா இயக்கியுள்ள இப்படத்தில் சரத்குமார், நிகிலா விமல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜேக்ஸ் பிஜோய் இசையமைத்துள்ள இப்படத்துக்கு கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். அப்லாஸ் என்டர்டெயின்ட்மென்ட் தயாரித்துள்ள இப்படம் வரும் ஜூன் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.

டீசர் எப்படி? - சைக்கோ கொலையாளி ஒருவரை காவல் அதிகாரிகளான சரத்குமாரும், அசோக் செல்வனும் இணைந்து தேடுகின்றனர். கொலைகாரனைத் தேடும் போலீஸ் என்ற ஒற்றை வரியை உறுதி செய்யும் டீசரில் க்ரைம் படங்களுக்கே உண்டான கொடூர கொலைகள் காட்டப்படுகின்றன. ‘தம் அடிச்சா கொஞ்ச நேரத்துல திரும்பி அடிக்கணும்னு தோணுதுல்ல... கொலைகாரனுக்கும் அப்டிதான், கொலை பண்றது ஒரு அடிக்‌ஷன்’ என சரத்குமார் பேசும் வசனம் கவனம் பெறுகிறது. பார்த்து பழகிய க்ரைம் த்ரில்லர் படங்களுக்கே உண்டான டெம்ப்ளேட்டுக்குள் அடங்கியுள்ள டீசரில் புதுமை அகப்படவில்லை. இருப்பினும் ஜேக்ஸ் பிஜாயின் பின்னணி இசை நம்பிக்கை அளிக்கிறது. படம் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது. டீசர் வீடியோ:

SCROLL FOR NEXT