தமிழ் சினிமா

மலேசியாவில் தொடங்கிய விஜய் சேதுபதி படம்

செய்திப்பிரிவு

‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்' படத்தின் இயக்குநரும், தயாரிப்பாளருமான பி.ஆறுமுக குமார் அடுத்து இயக்கும் படத்தில் விஜய் சேதுபதி கதையின் நாயகனாக நடிக்கிறார்.

யோகி பாபு, ருக்மணி வசந்த், பி எஸ் அவினாஷ், திவ்யா பிள்ளை, பப்லு, ராஜ்குமார் உட்பட பலர் நடிக்கிறார்கள்.

கரண் பகதூர் ராவத் ஒளிப்பதிவு செய்கிறார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். 7 சி’ஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இதன் தொடக்க விழா மலேசியாவில் உள்ள ஈப்போ நகரில் நடைபெற்றது.

SCROLL FOR NEXT