தமிழ் சினிமா

காஞ்சனா 3 படப்பிடிப்பு தொடக்கம்: ஒளிப்பதிவாளராக வெற்றி ஒப்பந்தம்

ஸ்கிரீனன்

சென்னையில் 'காஞ்சனா 3' படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஒளிப்பதிவாளராக வெற்றி பணிபுரிந்து வருகிறார்.

'முனி’, 'காஞ்சனா', 'காஞ்சனா 2' ஆகிய பேய் படங்கள் மூலம் தமிழ் திரையுலகில் வசூலை அள்ளியவர் இயக்குநர் லாரன்ஸ். தானே அப்படங்களில் நாயகனாக நடித்து, பேய் படங்களை மக்கள் ரசிக்கும்படி எடுத்து பெயர் பெற்றவர்.

தற்போது 'காஞ்சனா 3' படத்தின் படப்பிடிப்பை சென்னையில் தொடங்கியுள்ளார் லாரன்ஸ். இதிலும் தானே நாயகனாக நடித்து, இயக்கி வருகிறார். இப்படத்திற்காக ஓவியா, வேதிகா மற்றும் நிகிதா என 3 நாயகிகள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்கள். இதற்கு ஒளிப்பதிவாளராக வெற்றி பணிபுரிந்து வருகிறார். 'வீரம்', 'வேதாளம்' மற்றும் 'விவேகம்' உள்ளிட்ட அஜித் படங்களின் ஒளிப்பதிவின் மூலம் பிரபலமானவர் வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது

கோவை சரளா, ஸ்ரீமன், தேவதர்ஷினி உள்ளிட்டோரும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் முதல் பிரதி அடிப்படையில் பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது.

SCROLL FOR NEXT