ஜிகிர்தண்டா திரைப்படத்தின் புதிய ட்ரெய்லர் இன்று வெளியிடப்பட்டது. சமூக வலைத்தளங்களில் சினிமா ரசிகர்கள் இந்த ட்ரெய்லரைப் பகிர்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மார்ச் மாதம் வெளியான முதல் ட்ரெய்லரில், மதுரையில் இருக்கும் ரவுடி கும்பல், அவர்கள் செய்யும் அட்டூழியங்கள், லட்சுமி மேனன் - சித்தார்த் காதல், தாதாவான சிம்ஹாவின் முரட்டுத்தனம் முதலானவை இடம்பெற்றன.
தற்போது வெளியிட்டப்பட்ட ட்ரெய்லரில் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. சிம்ஹாவிடம் வேலை செய்யும் ரவுடிகள் 'ஆப்பி பர்த்துடே உனக்கு' என அவரை வாழ்த்தி, பிறந்தநாளுக்கு கேக் வெட்டுவதாக துவங்குகிறது.
முதல் ட்ரெய்லரைப் போலவே இதிலும் மதுரை ரவுடிக்களின் அடிதடிகள் தொடர்கின்றன. முக்கியமாக, நாயகனுக்கான பாடலைப் போல, சிம்ஹாவுக்கென தனிப் பாடல் ஒன்றும், அவரோடு லட்சுமி மேனன், அம்பிகா ஆகியோர் நடனம் ஆடுவதாகவும் காட்சியமைக்கப்பட்டுள்ளது.
ட்ரெய்லரின் முடிவில், சித்தார்த், "சார் இது அந்த மாதிரி ஸ்கிரிப்ட் இல்லை சார். இதுல வந்து, சமுதாயத்துல நடக்குற வன்முறையை எதிர்த்து உலக அமைதிய ஸ்ட்ரெஸ் பண்ணி ஸ்ட்ராங்கா ஒரு மெசேஜ் சொல்லப்போறோம் சார்" எனச் சொல்கிறார்.
லோக்கல் ரவுடியிசம், அதில் சிக்கி மீளும் நாயகனின் கதையை புது ஃப்ளேவரில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் சொல்ல முயற்சிப்பதாக தெரிகிறது.