மாமன்னன் பட போஸ்டர் 
தமிழ் சினிமா

மே 19-ல் 'மாமன்னன்' முதல் சிங்கிள் வெளியீடு - மாரி செல்வராஜ்

செய்திப்பிரிவு

சென்னை: வரும் 19-ம் தேதி மாமன்னன் படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகும் என இயக்குநர் மாரி செல்வராஜ் அறிவித்துள்ளார். நடிகர் வடிவேலுவின் பின்னணி குரலில் இந்தப் பாடல் வெளியாக உள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார்.

‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’ படத்தைத் தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கும் திரைப்படம் ‘மாமன்னன்’. உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்கும் இப்படத்தில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இந்தப் படத்தில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் வடிவேலு ஆகியோர் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரத்தில் ஃபஹத் பாசில் நடிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார், தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஏப்ரல் மாதம் வெளியானது. பரவலாக பலரது பாராட்டையும் அப்போது பெற்றிருந்தது. இந்நிலையில், வரும் 19-ம் தேதி மாமன்னன் படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகும் என இயக்குநர் மாரி செல்வராஜ் அறிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT