தமிழ் சினிமா

காஜல் அகர்வாலின் புதிய பிசினஸ்

செய்திப்பிரிவு

காஜல் அகர்வால், 2020-ம் ஆண்டு கவுதம் கிச்சலு என்ற தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்தத் தம்பதிக்கு கடந்த வருடம் ஆண் குழந்தைப் பிறந்தது.

குழந்தைக்கு நீல் என பெயரிட்டுள்ளனர். திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்து நடித்து வரும் காஜல் அகர்வால், இப்போது ஷங்கரின் ‘இந்தியன் 2’படத்தில் வயதான வேடத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், அவர் புதிதாக பிசினஸ் ஒன்றைத் தொடங்கி உள்ளார். ‘காஜல் பை காஜல்’ என்கிற அழகு சாதன பொருள் விற்பனையைத் தொடங்கி இருக்கும் அவருக்குத் திரையுலகினர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT