படத்தை இயக்கியுள்ள விநாயக் சந்திரசேகரன் கூறும்போது, “இது எனக்கு முதல் படம். குறட்டையை மையப்படுத்திய படம் என்றாலும், குடும்ப உறவுகள், சிக்கல்கள், நகைச்சுவை ஆகியவையும் இருக்கும். படத்தில் அனைவரும் நடிகர்களாக இல்லாமல் கதாபாத்திரமாக தெரிய வேண்டும் என நினைத்தேன். அப்படியே நடித்துள்ளனர். கதையோடு பார்வையாளர்கள் தங்களை தொடர்புபடுத்திக் கொள்ள முடியம். ரசிகர்களுக்கு இது கண்டிப்பாக பிடிக்கும்” என்றார்.