இயக்குநர் ராஜமெளலி ஆர்ஆர்ஆர் படத்தைத் தொடர்ந்து மகேஷ் பாபுவை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளார். எனினும், பல சந்தர்ப்பங்களில் மகாபாரதக் கதையை படமாக எடுக்கவிருப்பதாக ராஜமெளலி தனது ஆசையை வெளிப்படுத்தியுள்ளார்.
வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு இதுதொடர்பாக பேட்டியளித்த ராஜமெளலி, "இதற்கு முன்பு மக்கள் பார்த்த அல்லது படித்த கதாபாத்திரங்கள் நான் எடுக்கப்போகும் மகாபாரதத்தில் இருக்காது. கதை மாற்றமில்லை என்றாலும், கதாபாத்திரங்களும் கதாபாத்திரங்களுக்கு இடையிலான உறவுகளும் மேம்படுத்தப்படும். மொத்தத்தில் எனது பாணியிலான மகாபாரதமாக இருக்கும்" என்று தெரிவித்திருந்தார்.
தற்போது அளித்துள்ள பேட்டி ஒன்றில், "மகாபாரதத்தை திரைப்படமாக எடுக்கும் நிலைக்கு நான் வந்தால், நாட்டில் உள்ள மகாபாரதத்தின் ஒவ்வொரு பதிப்புகளையும் படிப்பேன். அதற்குக் குறைந்தது ஒரு வருடமாவது ஆகும். மொத்தத்தில் 10 பாகங்கள் கொண்ட படமாக இருக்கும் நான் எடுக்கப்போகும் மகாபாரதம் இருக்கும் என்பதை மட்டுமே இப்போது என்னால் சொல்ல முடியும்" என்று கூறியுள்ளார்.